சஜித் பிரேமதாசாவாக இருந்தாலும்சரி ரணில் விக்கிரமசிங்கமாக இருந்தாலும்சரி, அல்லது மஹிந்த ராஜபக்சவாக இருந்தாலும், அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே தான் காணப்படுகின்றார்கள் அவர்களுடைய இனவாத செயற்பாடுகள்தான் பிரதான கொள்கையாக இருந்து கொண்டிருக்கின்றது.
என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமனற உறுப்பினரும், பிரதே அபிவிருத்திக்குழுத் தலைவரும் சுகாதார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
இன்றயத்தினம் சனிக்கிழமை(04.06.2026) களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அங்குள்ள குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் அழைப்பின் பெயரில் அங்கு சென்றிருந்த அவர் வைத்தியசாலை நிருவாகத்தினருடனும், கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது வைத்தியசாலையில் காணப்படும் ஆளணிப்பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை, இடவசதியின்மை போன்ற பல விடையங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதுடன், கிழக்கு மாகாண சபையின் கீழ் ஆதார வைத்தியசாலையாகச் செயற்படும் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையை மத்திய அரசிய்ன கீழ் கொண்டு வருமாறும் இதன்போது வைத்தியசாலை நிருவாகம் பாராளுமன்ற உறுப்பினிடம் கோரிக்கை முன் வைத்திருந்தது.
இன்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வி.பிறேமானந், வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுத் தலைவர் சி.உதயணன், மற்றும் வைத்திய அதிகாரிகள், தாதியர்கள், அபிவிருத்திக்கு குழு உறுப்பினர்கள், என பலரும் கலந்து இதன்போது கொண்டிருந்தனர்.
இதன்போது கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
கடந்த காலங்களிலே வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்றி தாங்கள் ஒரு இனவாதிகள் இல்லை என்பதை காட்டிக் கொண்டிருந்தவர்கள் விசேடமாக மஹிந்த ராஜபக்ஷ தான் ஒரு இனவாதி இல்லை தான் ஒரு சிறந்த ஒரு தலைவன் என கூறிக் கொண்டிருந்தார். அவர் ஆட்சி பீடம் ஏறியதன் பின்னர் அவர் ஒரு இனவாதியாக மாறி இருந்தார்.
அதன் பின்னர் இவர் ஒரு இனவாதி தான் ஒரு நல்ல தலைவர் என தமிழ் மக்களிடையே தமிழ் அரசியல் வாதிகளை ஒன்றிணைத்து கொண்டு மக்களிடையே பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த ரணில் மிக்கிரமசிங்க அதன் பின்னர் அவரும் ஒரு இனவாதி என வெளிகொணரப்பட்டதன் பின்னர் தமிழ் அரசியல்வாதிகள் அவரைக் கைவிட்டு சென்று பின்னர் சஜித் பிரேமதாசர் அவர்களுடன் இணைந்து கொண்டிருந்தார்கள்.
சஜித் பிரேமதாசா அவர்கள் குறிப்பிட்டு இருந்தார் ரணில் விக்கிரமசிங்க அவர்களோ மகிந்த ராஜபக்சவோ அவர்கள்தான் இனவாதி தான் இனவாதி இல்லை என்பதை தெரிவித்து மக்களிடையே வாக்குகளை சேகரிக்கும் வேலைகளை ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் தங்களது கனவுகளை பூர்த்தி செய்ததன் பின்னர் அவர்களும் ஒன்றிணைந்தவர்களாக அவர்கள் ஓர் இனவாதிகளாக மாறிஇருந்தார்கள்.
உண்மையிலேயே கொழும்பிலே நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வில்கூட சஜித் பிரேமதாசா மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அவர்களோடு சேர்ந்த கூட்டு எதிரணியினர் என இனவாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களுடைய போலியான முகத்திரைகள் அந்த இடத்திலே கிழிக்கப்பட்டிருந்தன.
அந்தப் புத்தக வெளியிட்டிலேயே சஜித் பிரேமதாஸ் அவர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை அது ஒரு ஏஐ தொழி நுட்பத்தின் ஊடாகத்தான் அந்த புகைப்படங்கள் வெளிக் கொணரப்பட்டிருந்தன என அவருடைய கட்சியினர் பெய்களைத் தெரிவித்திருந்தார்கள்.
ஆகவே சஜித் பிரேமதாசாவாக இருந்தாலும்சரி ரணில் விக்கிரமசிங்கமாக இருந்தாலும்சரி, அல்லது மஹிந்த ராஜபக்சவாக இருந்தாலும், அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே தான் காணப்படுகின்றார்கள் அவர்களுடைய இனவாத செயற்பாடுகள்தான் பிரதான கொள்கையாக இருந்து கொண்டிருக்கின்றது.
நமது அரசாங்கம் ஆட்சி பீடமேறியதன் பின்னர் எந்த ஒரு தேர்தல் மேடைகளிலும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இனவாதத்தை நாங்கள் கற்கவும் இல்லை, இனவாதத்திற்கு எதிராக செயல்பட்ட ஒரே ஒரு அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இருந்து கொண்டிருக்கின்றது.
எங்களது ஜனாதிபதி அவர்கள் அனைத்து நிகழ்வுகளிலும் அவர் குறிப்பிடுகின்ற விடயம் இந்த நாட்டிலே இனவாதத்தை மீண்டும் தலை தூக்க விடமாட்டோம். இனவாதத்திற்கு எதிராக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்போம். இனவாதத்தை இந்த நாட்டிலே மீண்டும் உருவாக்கி மீண்டும் அதற்கு ஊக்கமளிக்கின்ற அரசாங்கமாக இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இராது என்ற விடயத்தை அனைத்து பிரதேசங்களிலும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்து வருகின்றார் என அவர் இதன்போது அவர் தெரிவித்தார்.






