நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விளக்கம்!
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் நாட்டில் சர்வஜன வாக்கெடுப்புக்குச் (Referendum) செல்லவேண்டிய எந்தவொரு அவசியமும் கிடையாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.










