• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • ஓட்டமாவடி ஆற்றில் குதித்த குடும்பப்பெண்: சாதுரியமாகச் செயல்பட்டு உயிருடன் மீட்ட இளைஞர்கள்!

ஓட்டமாவடி ஆற்றில் குதித்த குடும்பப்பெண்: சாதுரியமாகச் செயல்பட்டு உயிருடன் மீட்ட இளைஞர்கள்!

ஓட்டமாவடி: ஓட்டமாவடி ஆற்றில் குதித்து தத்தளித்த குடும்பப்பெண் ஒருவரை, அங்கு இருந்த இரு இளைஞர்கள் சாதுரியமாகச் செயல்பட்டு உயிருடன் மீட்டுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடிப் பாலத்தின் வழியே முச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த பெண், தொலைபேசியில் அவசரமாகப் பேச வேண்டும் என்று கூறி வாகனத்தை நிறுத்துமாறு சாரதியிடம் கேட்டுள்ளார். அவரது வார்த்தைகளை நம்பி சாரதி முச்சக்கர வண்டியை நிறுத்திய கணத்தில், அப்பெண் திடீரெனப் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்துள்ளார்.

ஆற்றில் குதித்துத் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள், உடனடியாக ஆற்றங்கரையில் நிறுத்தப்பட்டிருந்த தோணி ஒன்றைப் பயன்படுத்திச் விரைந்து சென்று அவரைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.

உயிருடன் மீட்கப்பட்ட பெண் உடனடியாகச் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share the Post: