சம்மாந்துறை (A.R.M. மஜீட்): விளையாட்டுத் துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட தேசிய விளையாட்டு விழாவில், சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய சம்மாந்துறை சது/விபுலானந்தா மல்வத்தை பாடசாலை மாணவர்கள் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று தாகிய சாதனையைப் படைத்துள்ளனர்.
இப்போட்டித் தொடரில், இப்பாடசாலையைச் சேர்ந்த எம். சஹானி (M. Sahani) உயரத் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், ஏ. ததிஷ்கா (A. Dathiska) ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் தமதாக்கிக் கொண்டனர். இச் சாதனையின் மூலம் இருவரும் மாகாண மட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காகத் தகுதி பெற்றுள்ளனர்.
மாணவர்களின் இந்தச் சிறப்புமிக்க வெற்றி பாடசாலை நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் பெருமையைச் சேர்த்துள்ளது. சாதனையை நிலைநாட்டிய மாணவர்களுக்குப் பல தரப்பினரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன், இப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி ஊக்குவித்த சம்மாந்துறை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ். சுலக்ஷன் (S. Sulaksan) அவர்களுக்குப் பாடசாலை நிர்வாகத்தினர் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.




