• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கல்முனையில் வீடு தீக்கிரை: தீயணைப்புப் பிரிவின் தயார்நிலை குறித்து பொதுமக்கள் கேள்வி

கல்முனையில் வீடு தீக்கிரை: தீயணைப்புப் பிரிவின் தயார்நிலை குறித்து பொதுமக்கள் கேள்வி

பாறுக் ஷிஹான்

கல்முனை, தைக்கா வீதியில் உள்ள வீடொன்றில் மின்சாரக் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் அவசரகாலச் செயற்பாடுகள் குறித்து அப்பகுதி மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை(4)  மாலை ஏற்பட்ட இத்தீ விபத்தையடுத்து கல்முனை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தன. எனினும், ஒரு வாகனத்திலிருந்து மற்றைய வாகனத்திற்கு நீர் நிரப்பும் நடவடிக்கை தாமதமாக இடம்பெற்ற பின்னரே தீயணைப்புப் பணிகள் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 தீயணைப்பு வாகனங்கள் நீரைச் சீரமைத்துத் தயார் நிலைக்கு வருவதற்குள் குறித்த வீடு முழுமையாகத் தீக்கிரையாகிவிட்டது. “அவசர காலத்தில் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் பெறுமதியானது. உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய அவசர சேவையில் இவ்வாறான நீர் பற்றாக்குறை மற்றும் தாமதங்கள் ஏற்படுவது பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குகிறது” என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Share the Post: