November 5, 2026

தம்பலகாமத்தில் மூன்று புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!-பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன தலைமையில் 

ஹஸ்பர் ஏ எச்  திருகோணமலை மாவட்ட, தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று புதிய வீடுகள் இன்று (05.11.2026) உரிய பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, புதிய வீடுகளை திறந்து உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடத்தில் கையளித்தார்.ஒவ்வொரு வீடும் தலா 10இலட்சம் ரூபா செலவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதி

தம்பலகாமத்தில் மூன்று புதிய வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு!-பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன தலைமையில்  Read More »

2026/2027 ஆண்டிற்கான அளவீட்டு உபகரணங்களை முத்திரையிடும் நடவடிக்கை

பாறுக் ஷிஹான்1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகளும், நியமங்களும் மற்றும் சேவைகளும் சட்டத்தின் பிரகாரம் 2026/2027 ஆம் ஆண்டிற்கான அளவீட்டு உபகரணங்களைப் பரிசோதித்து முத்திரையிடுவதற்கான வர்த்தகர்களுக்கான அறிவித்தலை, அம்பாறை மாவட்ட செயலக அளவீட்டு அலகுகள் மற்றும் சேவைகள் பிரிவு   வெளியிட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட சட்டத்தின் 22 வது பிரிவின் பிரகாரம், நிறுவனங்கள், அளவைகள் அல்லது நிறுக்கும்/அளக்கும் உபகரணங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் பரிசோதனை செய்யப்படல் வேண்டும் என்பது கட்டாயமாகும். எனவே, 2026 நவம்பர் 09,

2026/2027 ஆண்டிற்கான அளவீட்டு உபகரணங்களை முத்திரையிடும் நடவடிக்கை Read More »

திருச்சி சிறப்பு முகாமில் பெரும் பதற்றம்: மரங்களில் ஏறி இலங்கைத் தமிழர்கள் தீவிரம்!

திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்திற்குள் அமைந்துள்ள சிறப்பு முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் சிலர், மரங்களின் மீது ஏறி நின்றவாறு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. நீண்ட காலமாகத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை உடனடி விடுதலை செய்ய வேண்டும் அல்லது தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியும், முகாமின் அடிப்படை வசதிகள் மற்றும் வழக்கு விசாரணைகளின் காலதாமதத்தைக் கண்டித்தும் இவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.

திருச்சி சிறப்பு முகாமில் பெரும் பதற்றம்: மரங்களில் ஏறி இலங்கைத் தமிழர்கள் தீவிரம்! Read More »

மதவாச்சியில் விசித்திர நோய் பரவல்: ஒரே நாளில் 40 எருமைகள் உயிரிழப்பு – 2 கோடி ரூபாய் நஷ்டம்!

மதவாச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிறிய குளம் கிராமத்தில் உள்ள எருமைப் பண்ணை ஒன்றில் அடையாளம் காணப்படாத விசித்திர நோய் பரவியதன் காரணமாக, ஒரே நாளில் சுமார் 40 எருமைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. குறித்த பண்ணையின் உரிமையாளரான தாரக சங்கீத் என்பவருக்குச் சொந்தமான 150 எருமைகளில், கடந்த 02ஆம் திகதி மாலை முதல் 03ஆம் திகதி மாலை வரையான காலப்பகுதியில் இரு தொழுவங்களில் இருந்த 40 எருமைகள் திடீரென நிலத்தில் விழுந்து சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளன. இந்நடவடிக்கையினால்

மதவாச்சியில் விசித்திர நோய் பரவல்: ஒரே நாளில் 40 எருமைகள் உயிரிழப்பு – 2 கோடி ரூபாய் நஷ்டம்! Read More »

சம்மாந்துறை மக்களுக்கு பொலிஸாரும் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையும் முக்கிய அறிவித்தல்

sihanfarook அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியில் தலைக்கவசமின்றி ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்த நிலையில், போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் பாவனை தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2026.11.03ஆம் திகதி சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்  காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள்

சம்மாந்துறை மக்களுக்கு பொலிஸாரும் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையும் முக்கிய அறிவித்தல் Read More »

சொறிக்கல்முனை – வீரமுனை பிரதான வீதியில் பாரிய ஆபத்து-இடிந்து விழும் நிலையில் வீதி

sihanfarook அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை நாவிதன்வெளி  பிரதேசத்தை இணைக்கும் சொறிக்கல்முனை – வீரமுனை எல்லைக்கு அருகில் உள்ள பிரதான வீதியில் அமைந்துள்ள ஆபத்தான வளைவுப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வடிகால் அமைப்புப் பணிகள் மந்தகதியில் இடம்பெற்று வருவதால்  குறித்த வீதி இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் தொடர்ச்சியான அடைமழை காரணமாக அதிகளவிலான நீரோட்டம் வடிகால் வழியாகப் பாய்ந்து வருகின்றது. இதன் காரணமாக வடிகாலின் இரு மருங்கிலும்

சொறிக்கல்முனை – வீரமுனை பிரதான வீதியில் பாரிய ஆபத்து-இடிந்து விழும் நிலையில் வீதி Read More »

கல்முனையில் வீடு தீக்கிரை: தீயணைப்புப் பிரிவின் தயார்நிலை குறித்து பொதுமக்கள் கேள்வி

பாறுக் ஷிஹான் கல்முனை, தைக்கா வீதியில் உள்ள வீடொன்றில் மின்சாரக் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, கல்முனை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் அவசரகாலச் செயற்பாடுகள் குறித்து அப்பகுதி மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை(4)  மாலை ஏற்பட்ட இத்தீ விபத்தையடுத்து கல்முனை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தன. எனினும், ஒரு வாகனத்திலிருந்து மற்றைய வாகனத்திற்கு நீர் நிரப்பும் நடவடிக்கை தாமதமாக இடம்பெற்ற பின்னரே தீயணைப்புப் பணிகள்

கல்முனையில் வீடு தீக்கிரை: தீயணைப்புப் பிரிவின் தயார்நிலை குறித்து பொதுமக்கள் கேள்வி Read More »

வரலாற்றுச் சாதனைத் தொகை வீண்: அமெரிக்கத் தேர்தலில் எலான் மஸ்க்கிற்கு பலத்த சறுக்கல்!

அமெரிக்க இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்ட எலான் மஸ்க்கிற்கு, எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் கிடைக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கத் தேர்தல் வரலாற்றிலேயே ஒரு தனிநபர் ஒரு தேர்தல் சுழற்சிக்காகச் செலவிட்ட மிக அதிகபட்ச தொகையாக இது பதிவாகியுள்ளது. எனினும், மஸ்க்கின் இந்த பிரம்மாண்ட நிதி ஆதரவையும் மீறி, பல முக்கிய மாநிலங்களில் ஜனநாயகக் கட்சி கணிசமான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, டெக்சாஸ்

வரலாற்றுச் சாதனைத் தொகை வீண்: அமெரிக்கத் தேர்தலில் எலான் மஸ்க்கிற்கு பலத்த சறுக்கல்! Read More »

மட்டக்களப்பு கிராங்குளம் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு – பொலிஸார் தீவிர விசாரணை!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராங்குளம் தர்மபுரம் கடற்கரையில் அமைந்துள்ள மீன்பிடி வாடி ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை குறித்த பகுதியில் உள்ள மீனவ வாடியில் சடலம் ஒன்று காணப்படுவதைக் கண்ட உள்ளூர் மீனவர்கள் உடனடியாக இது குறித்து காத்தான்குடி பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றியுள்ளதுடன், அது தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்தவர் யார், அவர் எந்தப்

மட்டக்களப்பு கிராங்குளம் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு – பொலிஸார் தீவிர விசாரணை! Read More »

சந்திவெளி – திகிலிவெட்டை படகுப்பாதை சேவை மீண்டும் ஆரம்பம்

vadivel shagthivel மக்களின் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு திருத்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சந்திவெளி – திகிலிவெட்டை படகுப்பாதை சேவை மீண்டும் புதன்கிழமை (05.11.2026) முதல் வழைமை போன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் சு.சுதாகரன் தெரிவித்தார். பயணத்தை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த நாட்களில்  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்திவெளி திகிலிவெட்டை படகுப்பாதை சேவை திருத்தப் பணிகள் முடிவுற்ற நிலையில் மீள ஆரம்பிக்கப்படுவது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சந்திவெளி – திகிலிவெட்டை படகுப்பாதை சேவை மீண்டும் ஆரம்பம் Read More »