August 10, 2026

இலங்கைக்கு சீனா வழங்கும் 100 அதிசொகுசு மின்சாரப் பேருந்துகள்!

கொழும்பு: இலங்கையின் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்து, பசுமை ஆற்றல் வழிப் போக்குவரத்து முறையை ஊக்குவிக்கும் நோக்கில் 100 நவீன அதிசொகுசு மின்சாரப் பேருந்துகளை (Electric Luxury Buses) சீனா நன்கொடையாக வழங்கவுள்ளது. பாரம்பரிய எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கார்பன் உமிழ்வு மற்றும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. சீனாவினால் வழங்கிவைக்கப்படவுள்ள பேருந்து ஒன்றின் பெறுமதி சுமார் 2,25,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாயில் சுமார் 7.5 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

இலங்கைக்கு சீனா வழங்கும் 100 அதிசொகுசு மின்சாரப் பேருந்துகள்! Read More »

வவுனியா மண்ணில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்ட “சர்வதேச சகோதரிகள் தினம்”!

புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் “சர்வதேச சகோதரிகள் தினம்” வவுனியா மாநகரசபை கலாசார மண்டபத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் தலைவியும் பிரபல எழுத்தாளருமான சுடரி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்வேறு துறை சார்ந்த முக்கியஸ்தர்களும் சமூக ஆர்வலர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதா மேத்தா, வவுனியா மாநகரசபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன், வவுனியா

வவுனியா மண்ணில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்ட “சர்வதேச சகோதரிகள் தினம்”! Read More »

காத்தான்குடியில் Mirage & Motion நிறுவனத்தின் 100% இயற்கை ஆரோக்கிய மற்றும் அழகு சாதனப் பொருட்கள் அறிமுகம்!

காத்தான்குடி: Mirage & Motion நிறுவனத்தின் 100% இயற்கை (Natural) ஆரோக்கிய மற்றும் அழகு சாதனப் பொருட்கள் அறிமுக நிகழ்வு அண்மையில் காத்தான்குடியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷைக் அல்-ஹாபிள் A.K. சுஹைல் அகமத் (மஜீதி) அவர்களின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். முற்றிலும் இயற்கை மூலிகைகள் மற்றும் இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் Mirage & Motion

காத்தான்குடியில் Mirage & Motion நிறுவனத்தின் 100% இயற்கை ஆரோக்கிய மற்றும் அழகு சாதனப் பொருட்கள் அறிமுகம்! Read More »

தொடர் சைக்கிள் திருட்டு- ஹெரோயினுடன் சகோதரர்கள் உட்பட நால்வர் கைது

பாறுக் ஷிஹான்கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த துவிச்சக்கரவண்டி (சைக்கிள்) திருட்டுகள் தொடர்பாகத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், போதைப்பொருளுக்கு அடிமையான இரு சகோதரர்கள் உட்பட நால்வரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி  தலைமையில், பல்வேறு குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.எல்.எம். முஸ்தபா   வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். பல்வேறு குற்றத்தடுப்புப்

தொடர் சைக்கிள் திருட்டு- ஹெரோயினுடன் சகோதரர்கள் உட்பட நால்வர் கைது Read More »

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சை அமைதியான முறையில் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் அமைதியான முறையில் உயர்தர பரிட்சை இன்று நடைபெற்றது. மாணவர்கள் இறை ஆசிர்வாதம் வேண்டி ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்து பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்தது. மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பரிட்சை நிலையங்களில் இன்று காலை அமைதியான முறையில் முறையில் பரீட்சைகள் நடைபெற்றன. இந்த கல்வி வளையத்தில் காட்டு யானை அச்சுறுத்தல் உள்ள மாணவர்களுக்காக விசேட பரிட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்தரப் பரீட்சை அமைதியான முறையில் ஆரம்பம் Read More »

கோப்பாயில் அதிர்ச்சி: மாணவிகளின் படங்களை தவறாகப் பயன்படுத்தியதாக மாணவர் மீது குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி பயிலும் 17 வயது மாணவர் ஒருவர், அங்கு கற்ற முன்னாள் மாணவிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அவர்களின் அனுமதியின்றி பதிவுசெய்து, சமூக ஊடகங்கள் வழியாக தவறான முறையில் பகிர்ந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உயர்தரத்தில் கல்வி கற்று வரும் குறித்த மாணவர், தனது நண்பர்கள் அடங்கிய ‘WhatsApp’ குழுவொன்றில் இவ்வாறான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்

கோப்பாயில் அதிர்ச்சி: மாணவிகளின் படங்களை தவறாகப் பயன்படுத்தியதாக மாணவர் மீது குற்றச்சாட்டு! Read More »

பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் முற்றுகைஆணும் பெண்ணும் கைது

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நவகிரிஆறு  வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல   போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின்கீழ்  பக்கிஎல்லை  சிறப்புப் பணியக பொலிஸ் சார்ஜென்ட் சமரநாயக்க (32407) என்பவருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சோதனை முன்னெடுக்கப்பட்டது. இச்சோதனையின்போது

பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் முற்றுகைஆணும் பெண்ணும் கைது Read More »

சீரற்ற வானிலையையும் பொருட்படுத்தாது க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு ஆர்வத்துடன் சமூகமளித்த ஹட்டன் மாணவர்கள்!

நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) வெற்றிகரமாக ஆரம்பமானது. இன்றைய தினத்திலிருந்து ஒரு மாத காலத்திற்கு இப் பரீட்சைகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன. ஹட்டன் கல்வி வலயம் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் இன்று காலையில் கடுமையான சீரற்ற வானிலை நிலவிய போதிலும், மாணவர்கள் அதைப் பொருட்படுத்தாது மிகுந்த ஆர்வத்துடன் அதிகாலையிலேயே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது. இயற்கை விடுத்த சவால்களுக்கு மத்தியிலும், தமது பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும்

சீரற்ற வானிலையையும் பொருட்படுத்தாது க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு ஆர்வத்துடன் சமூகமளித்த ஹட்டன் மாணவர்கள்! Read More »

அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள் விற்பனை: ஹெட்டிபொலவில் 3 விற்பனையாளர்களுக்கு அபராதம்

குருநாகல், ஹெட்டிபொல பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட முகவர் விலையை விடக் கூடுதல் விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த மற்றும் விலைப் பட்டியலை நடைமுறைப்படுத்தத் தவறிய மூன்று விற்பனை நிலையங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அபராதம் விதித்துள்ளது. சந்தையில் மோட்டார் சைக்கிள்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், விநியோகக் குறைபாட்டைப் பயன்படுத்தி சில வர்த்தகர்கள் அதிக விலைக்கு மறுவிற்பனை செய்வதாகக் கிடைத்த புகார்களைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 27 அன்று அதிகாரசபையினால் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, வேறு

அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள் விற்பனை: ஹெட்டிபொலவில் 3 விற்பனையாளர்களுக்கு அபராதம் Read More »

இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் சந்திப்பு: அதிகாரப் பகிர்வு மற்றும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் திரு. விக்ரம் மிஸ்ரி அவர்களுடனான உயர்நிலைச் சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பின் போது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் பிரதேச ஆளுகை சார்ந்த முக்கிய சவால்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு நீடித்த மற்றும் நீதியான அரசியல் தீர்வின் அவசியத்தை வலியுறுத்திய பிரதிநிதிகள், அரசியலமைப்பின் அடிப்படையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் சந்திப்பு: அதிகாரப் பகிர்வு மற்றும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை! Read More »