இலங்கைக்கு சீனா வழங்கும் 100 அதிசொகுசு மின்சாரப் பேருந்துகள்!

கொழும்பு: இலங்கையின் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்து, பசுமை ஆற்றல் வழிப் போக்குவரத்து முறையை ஊக்குவிக்கும் நோக்கில் 100 நவீன அதிசொகுசு மின்சாரப் பேருந்துகளை (Electric Luxury Buses) சீனா நன்கொடையாக வழங்கவுள்ளது.

பாரம்பரிய எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கார்பன் உமிழ்வு மற்றும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

சீனாவினால் வழங்கிவைக்கப்படவுள்ள பேருந்து ஒன்றின் பெறுமதி சுமார் 2,25,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாயில் சுமார் 7.5 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அதிசொகுசு மின்சாரப் பேருந்துகள் பிரதானமாக கொழும்பு – கண்டி மற்றும் கொழும்பு – காலி ஆகிய முக்கிய நெடுஞ்சாலை (Expressway) வழித்தடங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இலங்கையின் பொதுப்போக்குவரத்துத் துறையை மின்சாரப் மயமாக்கி, பசுமை ஆற்றல் மாற்றத்தை நோக்கி நகர்த்துவதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்கச் சீன அரசு உடன்பட்டுள்ளது.

அத்துடன், இப்பேருந்துகளை தடையின்றி இயக்குவதற்குத் தேவையான மின்னேற்ற உள்கட்டமைப்பு வசதிகளையும் (Charging Infrastructure) நன்கொடையாக வழங்குமாறு போக்குவரத்து அமைச்சு சீன அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share the Post: