புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் “சர்வதேச சகோதரிகள் தினம்” வவுனியா மாநகரசபை கலாசார மண்டபத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
புதிய அலை கலை வட்ட மகளிர் அணியின் தலைவியும் பிரபல எழுத்தாளருமான சுடரி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்வேறு துறை சார்ந்த முக்கியஸ்தர்களும் சமூக ஆர்வலர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதா மேத்தா, வவுனியா மாநகரசபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன், வவுனியா மாவட்ட வைத்தியசாலை சிரேஷ்ட வைத்திய அதிகாரி செல்வதுஷ்யந், உதவி வைத்திய அதிகாரி சிவநந்தினி, வெண்புறா அமைப்பின் இயக்குநர் தனம்செயம் காண்டீபன், அகில இலங்கை சற்சங்க சபை இயக்குநர் சைவமணி சிவமைந்தன், மேனாள் பீடாதிபதி பார்த்தீபன், முனைவர் மேழிக்குமரன், வவுனியா மாவட்ட பதில் காணிப் பதிவாளர் லிசாந்தினி, சங்கமம் பிரித்தானியாக்கிளையின் தலைவர் சஜீந்திரா உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் ஒரு அங்கமாகச் சமூக நலன் சார்ந்த உதவிகளும் வழங்கப்பட்டன. இதற்கமைய வவுனியா மூன்றுமுறிப்பு அ.த.க. பாடசாலை நூலகத்திற்கு நூல்களும், வவுனியா இந்து அன்பக பெண்கள் காப்பகத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து மகளிர் அணி உறுப்பினர்களின் கவியரங்கம், இசைப் பாடல்கள் மற்றும் சிறார்களின் கலைநிகழ்ச்சிகள் அரங்கை அலங்கரித்தன.
இந்நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற அனுசரணை மற்றும் உதவிகளை வழங்கிய வெண்புறா அமைப்பு, அகில இலங்கை சற்சங்க சபை, சிரேஷ்ட சட்டத்தரணி தயாபரன், மேனாள் பீடாதிபதி பார்த்தீபன், விஜய் பதிப்பக உரிமையாளர் எஸ். விஜய் மற்றும் மாநகரசபை முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும், நிகழ்வை ஒருங்கிணைத்த வவுனியா மாவட்ட இணைப்பாளர் கலையரசி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த இணைப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.







