நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) வெற்றிகரமாக ஆரம்பமானது. இன்றைய தினத்திலிருந்து ஒரு மாத காலத்திற்கு இப் பரீட்சைகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.
ஹட்டன் கல்வி வலயம் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் இன்று காலையில் கடுமையான சீரற்ற வானிலை நிலவிய போதிலும், மாணவர்கள் அதைப் பொருட்படுத்தாது மிகுந்த ஆர்வத்துடன் அதிகாலையிலேயே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது.
இயற்கை விடுத்த சவால்களுக்கு மத்தியிலும், தமது பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் பரீட்சைக்குத் தோற்றும் ஹட்டன் மாணவர்கள் உட்பட நாட்டின் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்!



Post Views: 6




