டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி: பொத்துவிலில் விழிப்புணர்வுப் பேரணி பிரம்மாண்டமாக ஆரம்பம்!
டெங்கு நோயற்ற, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகமொன்றை கட்டியெழுப்பும் உயரிய நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் “கிழக்கு மாகாண டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தின்” அம்பாறை மாவட்ட இறுதி நாள் நிகழ்வு (09) பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து வெகு விமர்சையாக ஆரம்பமானது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் இளைஞர் காங்கிரஸின் அமைப்பாளர் பி. பசூர்கான் அவர்களின் சீரிய ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது. முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபைத் […]



