தம்பலகாமம் பிரதேச செயலகத்தில்  சரஸ்வதி பூஜை..!

ஹஸ்பர் ஏ எச் 

தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன்  தலைமையில் சரஸ்வதி பூஜை நிகழ்வு இன்று (16) தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கல்வி தெய்வமாகப் போற்றப்படும் சரஸ்வதியை வழிபடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் மத்தியில் ஆன்மீக உணர்வையும் கலை, கலாசார மரபுகளைப் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Share the Post: