சிராஜ் நகர் 97ஆம் சந்தியில் பஸ் தரிப்பிடம் இன்றி மக்கள் அவதி 

A.H.HASFAR HASFAR

கந்தளாய் – திருகோணமலை கண்டி வீதியில் அமைந்துள்ள சிராஜ் நகர் 97ஆம் சந்தியில், பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலை நோக்கிப் பயணிக்கும் பொதுமக்கள், குறித்த சந்தியில் பேருந்துக்காகக் காத்திருக்கும்போது, முறையான பேருந்து தரிப்பிடமோ அல்லது வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்புப் பெறக்கூடிய நிழற்குடை வசதியோ இல்லாத காரணத்தினால் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக, பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் கர்ப்பிணி தாய்மார்கள்மற்றும் நோயாளிகள் நீண்ட நேரம் வெயிலிலும் மழையிலும் திறந்தவெளியில் நின்று பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை காணப்படுகின்றது.

பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்துடன் தொடர்புடைய இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

எனவே, சம்பந்தப்பட்ட  துறைசார் அதிகாரிகள் இவ்விடத்தை நேரில் பார்வையிட்டு, பயணிகளின் நலனைக் கருத்திற்கொண்டு முறையான பேருந்து தரிப்பிடத்தையும் நிழற்குடையையும் அமைத்துக் கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Share the Post: