• Home
  • உள்ளூர் செய்திகள்
  • கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுகீஸ்வர பண்டார, இன்றைய தினம் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Share the Post: