August 12, 2026

முன்னர் நாட்டை ஆட்சி செய்தவர்கள் குறைவான தொகைகளைதான் மாகாண சபைகளுக்கு ஒதுக்கீடு செய்து வந்திருந்தார்கள் பிரபு எம்.பி

இதற்கு முன்னர் இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் குறைவான தொகைகளைதான் மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வந்திருந்தார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பேற்றுதன் பின்னர ;மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் எந்த ஒரு தங்கு தடையும் இன்றி அதிகமான நிதிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளானர். மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடத்தில் 27 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாபக நிருமானிக்கப்பட்ட ஆயுள்வேத

முன்னர் நாட்டை ஆட்சி செய்தவர்கள் குறைவான தொகைகளைதான் மாகாண சபைகளுக்கு ஒதுக்கீடு செய்து வந்திருந்தார்கள் பிரபு எம்.பி Read More »

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் ‘மட்டு இளைஞர்களின்’ 13-வது வருட தாகசாந்திச் சேவை நிறைவு–

 (கனகராஜா சரவணன்)  வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவ நிகழ்வை முன்னிட்டு, வருகை தந்த ஆயிரக்கணக்கான அடியார்களின் தாகத்தைத் தீர்க்கும் பொருட்டு ‘மட்டு இளைஞர்கள்’ இன்று (12) புதன்கிழமை தாகசாந்திச் சேவை மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. ஆலயத் திருவிழா காலங்களில் தொடர்ச்சியாகச் சமூகப் பணியாற்றி வரும் இவ்விலளைஞர் குழுவினர், இவ்வாண்டும் தங்களின் உன்னத சேவையைத் தொய்வின்றி 13-வது வருடமாக வெற்றிகரமாகத் தொடர்ந்துள்ளனர். கடுமையான வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாது, தீர்த்தோற்சவப் பெருவிழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான ஆன்மீக

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் ‘மட்டு இளைஞர்களின்’ 13-வது வருட தாகசாந்திச் சேவை நிறைவு– Read More »

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சம்

வரலாற்றுச்சிறப்புமிக்க அம்பாரை மாவட்டம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சம் இன்று (12) ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் இடம்பெற்றது. சிவபூமி என திருமூலரால் போற்றப்பட்ட இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டத்தில் வங்ககடலோரம் வீற்றிருந்து நாடிவரும் அடியவர்களின் குறைநிறைகளை தீர்த்து வேண்டும் செல்வத்தை வாரிவழங்கும் திருக்கோவில்  சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கொடியேற்றம் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்றதுடன் தொடர்ந்து 18 நாட்கள்  அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு தமிழ்ப்பிரதேச மக்களது திருவிழாவோடும்

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சம் Read More »

இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி செய்யப்படவில்லை கிழக்கு மாகாண ஆளுனர் ஆதங்கம்.

எக்கோ சுற்றுலா, அக்றோ சுற்றுலா என்றெல்லாம் கதைக்கின்றோம் ஆனால் இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி செய்யப்படவில்லை. கிழக்கு மாகாணத்திலே ஆயுர்வேத சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கு பெரிய சந்தர்ப்பம் இருக்கின்றது. என கிழக்கு மாகாண ஆளுனர் போராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடத்தில் 27 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாபக நிருமானிக்கப்பட்ட ஆளுள்வேத வைத்தியசாலைக் கான விடுதி இன்று புதன்கிழமை(12.08.2026) திறந்து வைக்கப்பட்து. இதன்போது கலந்து கொண்டு வைத்தியசாலையைத் திறந்து வைத்துவிட்டு

இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி செய்யப்படவில்லை கிழக்கு மாகாண ஆளுனர் ஆதங்கம். Read More »

100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களால் கோரப்பட்ட “கங்கை தீர்த்தப் படிக்கட்டு” – குமார் ஜெயக்குமரன் மற்றும் அவரது குழுவினர் முன்வந்து நடவடிக்கை

ஹஸ்பர் ஏ ஹலீம் – திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தில், பக்தர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த “கங்கை தீர்த்தப் படிக்கட்டு”  இன்று (12) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. குமார் ஜெயக்குமார் பவுண்டேசனின் தலைவர் குமார் ஜெயக்குமாரனின் சுமார் 19இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடமே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டது. இந்த தீர்த்தப் படிக்கட்டு அமைக்கப்பட வேண்டும் என்பது 100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் ஆலயத்திற்கு வருகை தரும்

100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களால் கோரப்பட்ட “கங்கை தீர்த்தப் படிக்கட்டு” – குமார் ஜெயக்குமரன் மற்றும் அவரது குழுவினர் முன்வந்து நடவடிக்கை Read More »

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுகீஸ்வர பண்டார, இன்றைய தினம் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்! Read More »

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலம்!

(கனகராஜா சரவணன்) வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (12) புதன்கிழமை மதியம் 12 மணிக்கு ஆலயத் தீர்த்தக் கேணியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 03 ஆம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இப்பெருவிழாவின் 10 ஆம் நாளான இன்று, ஆடி அமாவாசை தினத்தில் தீர்த்தோற்சவம் இனிதே இடம்பெற்றது.ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிஷேக, பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, வசந்த

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலம்! Read More »

இந்திய உதவிகளுக்கு சாதாரணமாக நன்றி கூறி கடந்து போக முடியாது” – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு

எமது சமூகம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்றால் கல்வி தான் எமக்கான ஒரே சாதனம். அந்த கல்வியை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், அந்த கல்விக்காக இந்திய அரசாங்கம் மலையக மாணவர்களுக்கு வழங்கும் உதவிகளுக்கு சாதாரணமாக நன்றி கூறி கடந்து போக முடியாது என்றார். கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை

இந்திய உதவிகளுக்கு சாதாரணமாக நன்றி கூறி கடந்து போக முடியாது” – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு Read More »

முல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க துரித நடவடிக்கை –  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகளை வழங்குவதுடன், மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு தன்னாலான அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பேன் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட மீனவ சமூகத்தின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்று (11.08.2026) நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில், கலந்துரையாடலின் நோக்கம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன் விளக்கமளித்தார். இதன்போது, மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் மீனவர்கள் தமது கடும் அதிருப்தியை அமைச்சரிடம் வெளிப்படுத்தினர். குறிப்பாக, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதில் கடற்றொழில் திணைக்களமும் கடற்படையினரும் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்ததுடன், இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதற்குப் பதிலளித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், “முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது. குறிப்பாக, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும், கடல் வளங்களை அழிக்கும் வகையிலும் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம். முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும். புதிதாக நியமனம் பெறவுள்ள 8 உத்தியோகத்தர்கள் விரைவில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர். இதன் மூலம் சட்ட அமுலாக்கம் மற்றும் மீனவர்களுக்கான சேவைகளை மேலும் வலுப்படுத்த முடியும். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் எந்தவிதமான தயக்கமும் இருக்காது. சிறிய வலைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத பர்ஸ் சீன் மீன்பிடி, டைனமைட் பயன்படுத்துதல், எல்லை மீறிய மீன்பிடி மற்றும் ஏரிகளுக்குள் இயந்திரப் படகுகளைப் பயன்படுத்துதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அரசாங்கத்தின் நோக்கம் எந்தவொரு மீனவரின் வாழ்வாதாரத்தையும் பாதிப்பது அல்ல. மாறாக, சட்டத்தை மதித்து தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுடன், எதிர்கால சந்ததியினருக்காக கடல் மற்றும் நீர்வளங்களை நிலையான முறையில் பாதுகாப்பதே எமது பொறுப்பாகும். முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கு எனக்குள்ள முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பேன். மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அமைச்சு தொடர்ச்சியாக முன்னெடுக்கும். மீனவர்களும் அரசாங்க நிறுவனங்களும் இணைந்து செயற்பட்டால்தான் நிலையான மீன்பிடித் துறையை உருவாக்க முடியும். எனவே, சட்டவிரோத நடவடிக்கைகளைத் தவிர்த்து, பொறுப்பான மற்றும் நிலையான மீன்பிடியை முன்னெடுக்குமாறு அனைத்து மீனவர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன் என அமைச்சர் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது 4,542 மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 2025ஆம் ஆண்டில் மாவட்டத்தின் மொத்த மீன் உற்பத்தி 8,220.49 மெட்ரிக் டன்னாகப் பதிவாகியுள்ளது. மாவட்ட மீனவர்களின் உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத் தேவைகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.67 மில்லியன் செலவில் சாலை மற்றும் தீத்தாக்கரை வலைப் பின்னும் மண்டபம் உள்ளிட்ட ஐந்து அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இரணைப்பாளையில் ரூ.100 மில்லியன் செலவில் பனிக்கட்டி ஆலை ஒன்றை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீன அரசின் நன்கொடையாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 64 முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட வீடுகளில் 57 வீடுகளுக்கான அடித்தளப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 2026ஆம் ஆண்டுக்கான மண்ணெண்ணெய் மானியத் திட்டத்தின் கீழ் மீன்பிடிப் படகுகளுக்காக மூன்று மாதங்களுக்கு ரூ.127.5 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மீனவர்களுக்கு 13 புதிய OFRP படகுகளும் வழங்கப்பட்டுள்ளன. மீன்பிடித் தொழிலை நவீனமயப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 2026ஆம் ஆண்டில் GPS தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கரைவலைப் பகுதிகள், படகுகள் தரித்து நிற்கும் இடங்கள் மற்றும் ஏரிப்பகுதிகளின் எல்லைகளை அடையாளப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. படகுகள் தரித்து நிற்கும் தளங்களில் வெள்ள ஒளிவிளக்குகள் மற்றும் சோலார் விளக்குகளை நிறுவும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. 2027ஆம் ஆண்டுக்காக நந்திக்கடல், நாயாறு மற்றும் சாலை ஏரிகளைத் தூர்வாருவதற்கு ரூ.330 மில்லியனும், இறால் குஞ்சுகள் இருப்பிடத் திட்டத்திற்காக ரூ.23 மில்லியனும் முன்மொழியப்பட்டுள்ளன. அத்துடன், 2026–2027 செயல் திட்டத்தின் கீழ் வீதி, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் சிறிய வலைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பர்ஸ் சீன் மீன்பிடி, டைனமைட் பயன்படுத்துதல், எல்லை மீறிய மீன்பிடி மற்றும் ஏரிகளுக்குள் இயந்திரப் படகுகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகள் அடங்குகின்றன. 2026ஆம் ஆண்டில் இதுவரை சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரூ.22.95 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், 3 படகுகளும் 2 இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலையான மீன்பிடித் துறையை உருவாக்கும் நோக்கில் கடல் மற்றும் நீர்வளங்களைப் பாதுகாத்தல், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், சட்ட அமுலாக்கத்தை வலுப்படுத்தல் மற்றும் பொறுப்பான மீன்பிடி தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்தல் ஆகியவை எதிர்கால முக்கிய முன்னுரிமைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. இக்கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், துரைராசா

முல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க துரித நடவடிக்கை –  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி Read More »

பொலன்னறுவையில் கொழும்பு – கல்முனை சொகுசுப் பேருந்து மோதி கொடூர விபத்து: தாயும் மகனும் பரிதாப பலி, குழந்தை படுகாயம்!

பொலன்னறுவை, பகமூண – தம்புள்ளை வீதியின் தமனயாய பகுதியில் (11) அதிகாலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் தாயும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஒன்றரை வயதுக் குழந்தையொன்று படுகாயமடைந்துள்ளது. இன்று அதிகாலை 1.25 மணியளவில் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி அதிவேகமாகப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து, தமனயாய பகுதியில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் திரும்ப முயன்றபோது அதன் மீது பலமாக மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. இவ்விபத்தில் பகமூண, தமனயாய பகுதியைச் சேர்ந்த

பொலன்னறுவையில் கொழும்பு – கல்முனை சொகுசுப் பேருந்து மோதி கொடூர விபத்து: தாயும் மகனும் பரிதாப பலி, குழந்தை படுகாயம்! Read More »