• Home
  • ஆன்மிகம்
  • திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சம்

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சம்

வரலாற்றுச்சிறப்புமிக்க அம்பாரை மாவட்டம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சம் இன்று (12) ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் இடம்பெற்றது.


சிவபூமி என திருமூலரால் போற்றப்பட்ட இலங்காபுரியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டத்தில் வங்ககடலோரம் வீற்றிருந்து நாடிவரும் அடியவர்களின் குறைநிறைகளை தீர்த்து வேண்டும் செல்வத்தை வாரிவழங்கும் திருக்கோவில்  சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் கொடியேற்றம் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்றதுடன் தொடர்ந்து 18 நாட்கள்  அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு தமிழ்ப்பிரதேச மக்களது திருவிழாவோடும் இடம்பெற்று இன்று 12ஆம் திகதி இடம்பெற்ற தீர்த்தோற்சவம் கொடியிறக்கம்; நாளை இடம்பெறும் பூங்காவனம் மற்றும் வைரவர் பூஜையுடன் நிறைவுறவுள்ளது.


ஆலயத்தில் மூலமூர்த்திக்கான பூஜை இடம்பெற்றதுடன் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு விசேட அலங்கார பூஜை நடைபெற்றதன் பின்னர் எழுந்தருளிய வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் அடியார்களினால் வீதி வலமாக அழைத்துச் செல்லப்பட்டு ஆலயம் முன்பாக அமைக்கப்பட்ட பந்தலிலே அமர்த்தப்பட்டார்.


அங்கு இடம்பெற்ற அபிசேக பூஜைகளின்; பின்பு நாதஸ்வர மேள ஒலி முழங்க அடியார்களின் பிரார்த்தனையுடன் வங்கங்கடலில் எம்பெருமான் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ தீர்த்தம் ஆடினார்.


ஆலயத்தலைவர் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற ஆடி அமாவாசை உற்சவம் மற்றும் தீர்த்தோற்சவ கிரியைகள் யாவும் சிவாகம வித்தியா பூசணம் சிவாச்சாரிய திலகம் ஜோதி;ட வித்தியா தத்துவநிதி விபுலமணி சிவஸ்ரீP சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய குரு சிவஸ்ரீ அங்குசநாதக்கருக்கள் ஆகியோhரால் நடாத்தி வைக்கப்பட்டது.

Share the Post: