இதற்கு முன்னர் இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் குறைவான தொகைகளைதான் மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வந்திருந்தார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பேற்றுதன் பின்னர ;மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் எந்த ஒரு தங்கு தடையும் இன்றி அதிகமான நிதிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளானர்.
மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடத்தில் 27 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாபக நிருமானிக்கப்பட்ட ஆயுள்வேத வைத்தியசாலைக்கான விடுதி இன்று புதன்கிழமை(12.08.2026) திறந்து வைக்கப்பட்து. இதன்போது கலந்து கொண்டு வைத்தியசாலையைத் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்pட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
2025 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற தொகையிலும் பார்க்க அதைவிட அதிகமான தொகை 2026 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைக்கு கிடைக்க பெற்றுள்ளது. அது போன்று எதிர்வரும் காலங்களிலும் 2027 ஆம் ஆண்டுக்கு இன்னும் அதிகமான நிதி விடுவிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
மாகாண சபையின் ஊடாக மேற்கொள்ளப்பட இருக்கின்ற அபிவிருத்தி செயல்பாடுகள் அங்கிருக்கின்ற திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி செயற்பாடுகள், அதுபோன்று பிரதேச மட்டத்தில் இருக்கின்ற சபைகள் உள்ளிட்ட அனைத்துக்கும் நாங்கள் அதிகமான நிதிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.
இதற்கு முன்னர் இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் குறைவான தொகைகளைதான் மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வந்திருந்தார்கள். ஆனால் இப்போது இந்த நாட்டை சரியான பொருளாதார கட்டமைப்பு உட்படுத்தி அரச வருமானம் மட்டும் துறைகளை அதிகரித்து அந்த நிதிகளைக் கொண்டு சரியாக முகாமை செய்து அதனூடாக அபிவிருத்தி செய்யும் வேலை திட்டங்களையும் நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம்.
அந்த வகையில் அவ்வாறான நிதிகளை மாகாணங்களுக்கு நாம் பகிர்ந்து அளித்துக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு வழங்கப்படுகின்ற நிதி உதவிகளைக் கொண்டு வைத்தியத்துறை சார்ந்த திட்டங்கள், கல்வித்துறை சார்ந்த செயற்பாடுகள், மற்றும் ஏனைய விடயங்களுக்காகவும் தாராளமாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக எங்களது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற வைத்தியசாலைகள் சில தேவைகளோடு இயங்குகின்றன அவ்வாறான தேவைகளையும், வரும்காலங்களில் பூர்த்தி செய்து வைக்கப்படும்.
பிரதேச மக்கள் பழமை மாறாது சுதேச வைத்தியத்திலே அவர்களது ஆர்வத்தை காட்டுகின்றார்கள். என்னதான் ஆங்கில மருத்துவத்துறை வளர்ச்சி அடைந்திருந்தாலும் மக்கள் சுதேச வைத்தியத்துறையில் நாட்டம் செலுத்தி வருகின்றார்கள். அதற்காக வைத்தியர்கள் அவர்களது கடமைகளையும் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றார்கள் அதற்கான பூரண ஒத்துழைப்புக்களை கிழக்கு மாகாண சபையின் ஊடாக ஆளுநர் பங்களிப்பினை வழங்கி வருகின்றார்.
கிழக்கு மகாண ஆளுநர் ஊடாக வீதி அபிவிருத்தி, பாடசாலை கட்டிடங்கள் அமைத்தல், உள்ளிட்ட பல அபிவிருத்தித் இடத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் அதிகளவு நிதி தேங்கி இருக்கின்றன. அந்த நிதியை பயன்படுத்தி தவிசாளர் மக்களுக்கு பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். என நாம் எதிர்பார்க்கின்றோம். அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற சட்ட திட்டங்களை சரியான முறையில் முன்னெடுக்கின்ற சபையாக மண்முனை தென் எருவில் பற்று சபை திகழ்கின்றது. அதன் தவிசாளர் கட்சி பேதங்களை கடந்து மக்கள் சேவையை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார். என அவர் இதன்போது தெரிவித்தார்.




