மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட MG மகேஷா ஆயுர்வேத தனியார் மருத்துவமனை 15.07.2026 புதன்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்கள் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு குறித்த மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.
இதன் போது கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் Dr.எம்.ஏ.நபீல், கிழக்குப் பல்கலைக்கழக சுகாதாரப் பராமரிப்பு அறிவியல் பீட குடும்ப மருத்துவப் பேராசிரியர் Dr.கே.அருளானந்தம், சித்த ஆயுர்வேத வைத்திய நிபுணர் Dr.S.உதயனன், மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத சிரேஷ்ட வைத்திய அதிகாரி, Dr.T.குவிதாகரன், மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத வைத்திய அதிகாரி, Dr.P.நிஷாந்தன், Dr. அருளானந்தம், மதுவரித் திணைக்கள தலைமைக் காரியாலய ஓய்வுநிலை பிரதி ஆணையாளர் S.ரஞ்சன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் திரு.தினேஷ், மாநகர சபை ஆணையாளர் திரு.தனஞ்செயன் MG மகேஷா நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.M.சுதாகரன், அரச அதிகாரிகள், நிறுவனப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.







