July 17, 2026

BYD கார் காட்சியறை திறப்பு மட்டக்களப்பு

ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் BYD கார் விற்பனை நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட காட்சியறை இன்று (16) காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு நகரின் ஊரணி பகுதியில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட BYD காட்சியறையின் தவிசாளர் தவபாலன் ஹரி பிரதாப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சரித் பண்டித ரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டு காட்சியறையை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். […]

BYD கார் காட்சியறை திறப்பு மட்டக்களப்பு Read More »

கிண்ணியாவில் மாவட்ட திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

திருகோணமலை மாவட்ட திறன் விருத்தி பகல் நேரப் பராமரிப்பு நிலையம் கிண்ணியா நடுவூற்று பகுதியில் இன்று (17)உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்றது.குறித்த கட்டிடத்தை கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னிலகே பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இதில் பிரதியமைச்சர் களான வசந்த பியதிஸ்ஸ, அருண் கேமசந்திரா,

கிண்ணியாவில் மாவட்ட திறன் அபிவிருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு Read More »

ஐஸ், கஞ்சாவுடன்   போதைப்பொருள் வியாபாரி கைது

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் இகினியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பரகஹகெலே பகுதியில் நீண்டகாலமாக இளைஞர்களை இலக்கு வைத்து   போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த  சந்தேக நபர்   பெருந்தொகை போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட  ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்இ வியாழக்கிழமை(16) மாலை  முன்னெடுக்கப்பட்ட  சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரின் வீட்டைப்

ஐஸ், கஞ்சாவுடன்   போதைப்பொருள் வியாபாரி கைது Read More »

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர இடமாற்றம்

பாறுக் ஷிஹான் புதிய கிழக்கு மாகாணப் பொறுப்பதிகாரியாக மகேஷ் சேனரத்ன நியமனம்  பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவு கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (சட்டத்தரணி) வருண ஜயசுந்தர  பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதேவேளை, ஊவா மாகாணத்திற்குப் பொறுப்பான

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர இடமாற்றம் Read More »

அம்பாறை தமிழர்களின் பூர்விகத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும்  தமிழரசின் திட்டத்துக்காக திருட்டு கூட்டணி அமைப்பு –ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன்

தமிழ் மக்களின் பூர்வீகமான அம்பாறை மாவட்டத்தை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் தமிழரசு கட்சியின் கொள்கையான முஸ்லிம்களுக்கு சுயாட்சி திட்டத்துக்காக  இந்த 6 கட்சிகள் கொண்ட திருட்டுக் கூட்டணி அமைக்கப்பட்டள்ளது எனவே இந்த சுயாட்சி திட்டத்தை செயல்படுத்த சம்பந்தன் தலைவர் பிரபாகரனை முடித்துவிடச் சொன்னாரா?  என்ற சந்தேகம் எழுந்துள்ளது என ஈழத் தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்தார். ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் இன்று வியாழக்கிழமை (16) ஊடக அறிக்கை

அம்பாறை தமிழர்களின் பூர்விகத்தை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும்  தமிழரசின் திட்டத்துக்காக திருட்டு கூட்டணி அமைப்பு –ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன் Read More »

வரட்சி பிரதேசங்களுக்கு குடி நீர்வழங்குவதற்கான நிதி அரசாங்கம் நிறுத்தியுள்ளது – செங்கலடி பிரதேசசபை அமர்வில் கண்டனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சி ஏற்பட்டுள்ள பிரதேசங்களுக்கு குடி நீர்வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகளை தற்போதைய அரசாங்கம் நிறுத்தியுள்ளமைக்கு ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேசசபையின் மக்கள் பிரதிநிதிகள் அமர்வில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வருடத்தின் நடுப்பகுதியில் ஏற்படும் வரட்சியின் போது மக்களுக்கான குடிநீரை உள்ளுராட்சி மன்றங்கள் பவுசர்கள் மூலமாக வழங்கிவந்தன. அதற்கான நிதியொதுக்கீடுகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த செலவினங்களுக்கான நிதியொதுக்கீடுகளை நிறுத்தியுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்று – செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதுளை வீதியை அண்டியுள்ள பல

வரட்சி பிரதேசங்களுக்கு குடி நீர்வழங்குவதற்கான நிதி அரசாங்கம் நிறுத்தியுள்ளது – செங்கலடி பிரதேசசபை அமர்வில் கண்டனம் Read More »

30 ஆண்டுகாலப் பெருந்திட்டம்! 3 ஆண்டுகளில் புதிய பொலிவு பெறும் கட்டுநாயக்க விமான நிலையம்: ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் முக்கிய தீர்மானம்!

அடுத்த 30 ஆண்டுகால எதிர்காலத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் முழுமையாக நவீனமயமாக்குவதற்கான விசேட அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (16) நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே இம்மாபெரும் அபிவிருத்தித் திட்டம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் திட்டங்கள் வருமாறு: 1. கட்டுநாயக்க விமான நிலைய

30 ஆண்டுகாலப் பெருந்திட்டம்! 3 ஆண்டுகளில் புதிய பொலிவு பெறும் கட்டுநாயக்க விமான நிலையம்: ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் முக்கிய தீர்மானம்! Read More »

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை —ஈ.பி.டி.பி அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம்

(கனகராஜா சரவணன்) கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை கூழங்களை அகற்றுகின்ற உழவு இயந்திர பெட்டியில் உணவு பொருட்களை எடுத்துச் சென்று உணவு சமைத்து கொடுத்துள்ளமை இந்து மக்களையும் மதத்தையும் அவமதிப்பதான ஒரு மிக மோசமான செயல்  இந்த செயலை ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில்  நேற்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை —ஈ.பி.டி.பி அந்தனிசில் ராஜ்குமார் கண்டனம் Read More »

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தின விழிப்புணர்வு செயலமர்வு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தினால், சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினத்தினை ஒட்டி விசேட விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று கல்முனையில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. இச் செயலமர்வு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ. அஸீஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இச் செயலமர்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மீளாய்வு கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் நிஹால் சந்திரசிறி மற்றும் மனித உரிமைகள் அதிகாரி பிரியங்க விஜேநாயக்க ஆகியோர் கலந்து கொண்டு

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தின விழிப்புணர்வு செயலமர்வு Read More »

இலங்கைக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய இந்தியா

இந்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனங்களின் முன்னணி வர்த்தக அமைப்பான NASSCOM இன் தலைவர் திரு. ராஜேஷ் நம்பியார் தலைமையிலான இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவொன்று 2026 ஜூலை 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்டது. 2026 ஜூலை 16 ஆம் திகதி, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், இலங்கை தொழில்நுட்ப சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக (Tech SMEs)

இலங்கைக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய இந்தியா Read More »