Filter posts by category

உலகச் செய்திகள்

மாலபே சட்டவிரோத மதுபான ஆலை: இந்தியாவில் இருந்து போலி ஸ்டிக்கர்கள்!

(கனகராஜா சரவணன்)   கடுவெல, மாலபே சுதர்ஷன மாவத்தையில் இரகசியமாக இயங்கிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட மதுபான பாட்டில்களுக்கான பாதுகாப்பு ஸ்டிக்கர்கள், இந்தியாவில் உள்ள ஸ்டிக்கர் அச்சிடும் நிறுவன மொன்றிலிருந்து பெறப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த தகவல், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது. மேலும், குறித்த ஆடம்பர இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில், உரிமம் பெற்ற மதுபானங்களைப் போன்று தயாரிக்கப்பட்டு லேபிள் மற்றும் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட 18,000-க்கும் அதிகமான மதுபான போத்தல்களும்,

மாலபே சட்டவிரோத மதுபான ஆலை: இந்தியாவில் இருந்து போலி ஸ்டிக்கர்கள்! Read More »

பெங்களூருவில் 7-வது உலகத் திருக்குறள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (05.07.2026) அன்று கர்நாடக மாநிலம் பெங்களூரு புனித ஜோசப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாளராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். “திருக்குறள் உணர்த்தும் உலக அமைதியும் மாந்தநேய மாண்புகளும்” என்ற பிரதான தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இம்மாநாட்டில், தமிழ்மறையின் உலகளாவிய வாழ்வியல் நெறிகள் மற்றும் மாந்தநேயக் கருத்துகள் குறித்து அவர் தனது சிறப்புரையை நிகழ்த்தினார்.” விழாவிற்குப் புனித ஜோசப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அருட்திரு விக்டர் லோபோ எஸ்.ஜே. தலைமை தாங்கினார். தமிழ்நாடு அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.தென்னரசு, இந்திய விண்வெளி

பெங்களூருவில் 7-வது உலகத் திருக்குறள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (05.07.2026) அன்று கர்நாடக மாநிலம் பெங்களூரு புனித ஜோசப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. Read More »

அமெரிக்காவின் 250வது சுதந்திர தினம்: அமெரிக்க தேசியக் கொடியின் வண்ணங்களில் மிளிர்ந்த கொழும்பு தாமரைக் கோபுரம்!

அமெரிக்காவின் 250வது சுதந்திர தின (சுதந்திரத்தின் கால் மில்லேனியம்) நிறைவைக் குறிக்கும் வகையில், கொழும்பின் அடையாளமான தாமரைக் கோபுரம் (Lotus Tower) அமெரிக்கத் தேசியக் கொடியின் வண்ணங்களால் ஒளிரூட்டப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக இந்த விசேட ஒளிரூட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த 250வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக, தாமரைக் கோபுரம் முழுவதும் அமெரிக்கக் கொடியின் சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிற

அமெரிக்காவின் 250வது சுதந்திர தினம்: அமெரிக்க தேசியக் கொடியின் வண்ணங்களில் மிளிர்ந்த கொழும்பு தாமரைக் கோபுரம்! Read More »

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழு மகஜர் கையளிப்பு —

(கனகராஜா சரவணன்) தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் இந்தியா தமிழ்நாட்டிற்கு சென்று சென்னையில் தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய் இன்று வெள்ளிக்கிழமை (3) சந்தித்து ஈழதமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடி எழுத்து மூலமாக கோரிக்கை கடிதம் ஒன்றை கையளிததுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய சந்திப்பு தொடர்பாக தமிழ் தேசிய பேரவை இன்று வெள்ளிக்கிழமை (3) ஊடக

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழு மகஜர் கையளிப்பு — Read More »

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜயை சந்தித்துப் பேசினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (03) நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் முக்கிய அம்சங்கள்: தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், ஈழத் தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் அவரைத் தலைமைச் செயலகத்தில் சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜயை சந்தித்துப் பேசினார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! Read More »

பாகிஸ்தானில் பிரத்தியேக வகுப்பு நிலைய கூரை இடிந்து வீழ்ந்ததில் 14 சிறுவர்கள் பலி.!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், லாகூர் நகரின் புறநகர்ப் பகுதியான கஹ்னாவில் இயங்கி வந்த தனியார் பிரத்தியேக வகுப்பு நடத்தும் நிலையமொன்றின் கூரை திடீரென இடிந்து வீழ்ந்ததில், 7 – 11 வயதுக்குட்பட்ட 14 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மாணவர்கள் வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த போதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து குறித்து தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாக மீட்புக்குழுவின் ஊடகப் பேச்சாளர்

பாகிஸ்தானில் பிரத்தியேக வகுப்பு நிலைய கூரை இடிந்து வீழ்ந்ததில் 14 சிறுவர்கள் பலி.!! Read More »

டொலரின் விற்பனை விலை வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய நாணய மாற்று வீதம்!

இலங்கை மத்திய வங்கி இன்று (30) வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், டொலரின் விற்பனை விலையும் குறைவடைந்துள்ளது. அதற்கமைய, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 341.30 ரூபாயாகப் பதிவாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (26) இதன் விற்பனை விலை 341.87 ரூபாயாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச மற்றும் உள்நாட்டு பொருளாதாரக் காரணிகள் மற்றும் வெளிநாட்டு நாணயச் சந்தையின் நகர்வுகளுக்கு அமைவாக,

டொலரின் விற்பனை விலை வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய நாணய மாற்று வீதம்! Read More »

பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார்

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் மாண்புமிகு கலாநிதி சிரி வால்ட் அவர்கள் பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் நிலையில் கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் 24 பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர அவர்களும் கலந்துகொண்டார். சுவிட்சர்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான நல்லுறவையும் மேலும் வலுப்படுத்துவதற்கு சபாநாயகர் வழங்கிய ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் தூதுவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இலங்கையில் தனது பதவிக்காலம் முழுவதும்

பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார் Read More »

15 ஆண்டுகளுக்குப் பின் சீனாவில் சாதனை: சர்வதேச சமையல் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பால் சாதம், தேங்காய் ரொட்டிக்கு குவிந்த பாராட்டு!

பெய்ஜிங்: சீனாவில் நடைபெற்ற மதிப்புமிக்க 2026 கோடைக்கால சமையல் கலைஞர்கள் போட்டியில் (Summer Culinary Artists Competition 2026) இலங்கை சமையல் குழு வெள்ளிப் பதக்கத்தை வென்று, சர்வதேச சமையல் துறையில் தேசத்தின் பெயரைப் பொன்னெழுத்துக்களில் பொறித்துள்ளது. இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் சீன மண்ணில் சர்வதேச சமையல் சாதனை ஒன்றை இலங்கை பதிவு செய்துள்ளது. சீனாவின் கிங்டாவோ (Qingdao) நகரில் கடந்த ஜூன் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் இப்போட்டி மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

15 ஆண்டுகளுக்குப் பின் சீனாவில் சாதனை: சர்வதேச சமையல் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பால் சாதம், தேங்காய் ரொட்டிக்கு குவிந்த பாராட்டு! Read More »

காசாவில் புதிய சுகாதார அச்சுறுத்தல்: அகதி முகாம்களை உலுக்கும் எலித் தொல்லையும் தீவிர தோல் நோய்களும்!

போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியில், இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள தற்காலிக முகாம்களில் எலிகளின் பெருக்கம் அதிவேகமாக அதிகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது அங்கு ஏற்கனவே நிலவி வரும் பொதுச் சுகாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது. முகாம்களில் மலைபோல் குவிந்துள்ள குப்பைக் கூளங்கள், வீதிகளில் வழிந்தோடும் திறந்தவெளி கழிவுநீர் மற்றும் மிக நெருக்கடியான தற்காலிகக் குடியிருப்புகள் ஆகியவை எலிகள் மற்றும் பூச்சிகள் பெருகுவதற்குக் பிரதான காரணங்களாக அமைந்துள்ளன. சரியான சுகாதார வசதிகளோ அல்லது தூய்மையான

காசாவில் புதிய சுகாதார அச்சுறுத்தல்: அகதி முகாம்களை உலுக்கும் எலித் தொல்லையும் தீவிர தோல் நோய்களும்! Read More »