ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்: வணிகக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் – டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம்!
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் சென்று கொண்டிருந்த ‘எவர் லவ்லி’ (Ever Lovely) என்ற வணிகக் கப்பல் மீது ஈரான் நடத்திய ஆளில்லா வானூர்தி (Drone) தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, ஈரான் இக்கப்பலை இலக்கு வைத்து மொத்தம் நான்கு ஆளில்லா வானூர்திகளை ஏவியுள்ளது. எனினும், அங்கு நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகள் உடனடியாகச் செயற்பட்டு அதில் மூன்று ஆளில்லா வானூர்திகளை









