Filter posts by category

உலகச் செய்திகள்

‘திட்வா’ சூறாவளி பாதிப்பிலிருந்து கல்வித்துறையை மீட்டெடுக்க யுனிசெப் நிதியுதவி: பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் விசேட சந்திப்பு!

‘திட்வா’ (Ditwah) சூறாவளியினால் கல்வித்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கான தற்போதைய கூட்டு முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, யுனிசெப் (UNICEF) அமைப்பின் உயர் மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துள்ளனர். இந்த விசேட சந்திப்பு கடந்த ஜூன் 12 ஆம் திகதி கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் இடம்பெற்றது. “திட்வா சூறாவளி கல்வி அவசர பதில் திட்டத்தின் முதலாம் கட்ட முன்னேற்ற அறிக்கை (ஜனவரி – ஏப்ரல் 2026)” என்ற தலைப்பிலான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள

‘திட்வா’ சூறாவளி பாதிப்பிலிருந்து கல்வித்துறையை மீட்டெடுக்க யுனிசெப் நிதியுதவி: பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் விசேட சந்திப்பு! Read More »

ஊடகவியலாளர்களுக்கு சுவிட்சர்லாந்தில் 2 வருட வேலைவாய்ப்பு

ஹஸ்பர் ஏ.எச் இலங்கை ஊடகவியலாளர்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில், சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு வருட கால ஒப்பந்த அடிப்படையில் தொழில் வாய்ப்புக்களை வழங்குமாறு சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வால்ட்யிடம் (Dr. Siri Walt) உத்தியோகபூர்வ கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். பாதுகாப்பான மற்றும் சட்ட ரீதியான புலம்பெயர்வு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட சந்திப்பொன்று  சனிக்கிழமை   (13) அம்பாறை

ஊடகவியலாளர்களுக்கு சுவிட்சர்லாந்தில் 2 வருட வேலைவாய்ப்பு Read More »

சுவிற்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர்- மட்டு ,அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பு

பாதுகாப்பான வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில்  செயலமர்வு புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம்,வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியாகம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர் தகவல் நிலையம் (Migration Information Centre – MIC) வேலை திட்டத்தின் கீழ் இலங்கை வாழ் பொதுமக்கள் புலம்பெயர் வெளிநாட்டு பயணங்களின் போது சட்டவிரோதம் அற்ற பாதுகாப்பான வெளிநாட்டு பயணங்களை  மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு சனிக்கிழமை  (13)

சுவிற்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர்- மட்டு ,அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பு Read More »

கிழக்கு மாகாண நிலப் பிரச்சினை தொடர்பிலான தீர்வு தொடர்பில் உயர்ஸ்தானிகர் இடத்தில் முன்வைப்பு

சுவிஸ்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் அவுஸ்திரேலியா  நாட்டின்  இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்  ஆகியோர் கிழக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ  விஜயத்தினை இந்த வாரம் மேற்கொண்டு இருந்தனர். இவ்  இராஜ தந்திரிகள்  கிழக்கு மாகாணத்திலுள்ள உயர் அரச அதிகாரிகள், சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்களை சந்தித்து இருந்தனர். இந்த சந்திப்பின்  போது  அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பின் சார்பில் இவ்வமைபப்பின் பணிப்பாளர் கண்டுமணி லவகுசராசா, பிரதிப் பணிப்பாளர்  அழகுராசன்  மதன் ஆகியோரையும் நேற்றைய தினம் (10.06.2026) 

கிழக்கு மாகாண நிலப் பிரச்சினை தொடர்பிலான தீர்வு தொடர்பில் உயர்ஸ்தானிகர் இடத்தில் முன்வைப்பு Read More »

சுவிட்சர்லாந்து உயர்ஸ்தானிகர் கிழக்கு ஆளுநர் சந்திப்பு

இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் Siri Walt அவர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவுக்கும்  இடையிலான சந்திப்பு இன்று (11) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள், சுற்றுலாத்துறை, மீன்வளத்துறை மற்றும் விவசாயத்துறையின் மேம்பாடு தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், கிழக்கு மாகாணத்தில் நிலவும் காணி தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை

சுவிட்சர்லாந்து உயர்ஸ்தானிகர் கிழக்கு ஆளுநர் சந்திப்பு Read More »

உடன்படிக்கையில் கையெழுத்திடாவிடின் மீண்டும் தாக்குதல்: ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல்!

அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் முன்வைத்துள்ள அமைதி உடன்படிக்கையில் ஈரான் உடனடியாகக் கையெழுத்திடாவிட்டால், மீண்டும் மிகக் கடுமையான ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல செய்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இந்த அதிரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானுக்குள் இருக்கும் முக்கிய இலக்குகளைத் தகர்ப்பதற்காக அமெரிக்கா அண்மையில் 49 டொஹாக் (Tomahawk) ரக அதிநவீன ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால்,

உடன்படிக்கையில் கையெழுத்திடாவிடின் மீண்டும் தாக்குதல்: ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல்! Read More »

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் Matthew Duckworth மற்றும் கிழக்கு ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் Matthew Duckworth அவர்களும், கிழக்கு மாகாண ஆளுநர் Jayantha Lal Ratnasekera அவர்களும் இன்று (10) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இது உயர்ஸ்தானிகரின் முதல் கிழக்கு மாகாணப் பயணமாகும். இதன்போது கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள், அவற்றிற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள், கடல்சார் மற்றும் பிராந்திய பாதுகாப்பு, சுற்றுலாத்துறை, மீன்பிடித் தொழில் மற்றும் விவசாயத் துறையின் மேம்பாடு போன்ற விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், கிழக்கு மாகாணத்தில் நிலவும் காணி

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் Matthew Duckworth மற்றும் கிழக்கு ஆளுநர் சந்திப்பு Read More »

மலேசியாவின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சந்திப்பு

திருகோண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மற்றும் மலேசியாவின் இலங்கைக்கான தூதுவர்  பாதி ஹிஸாம் ஆதம் அவர்களையும், தூதரக முதன்மைச் செயலாளர் அமீர் ஹம்ஸா அவர்களையும் நட்பு ரீதியாக சந்தித்து இன்று (09) கலந்துரையாடினார் இச்சந்திப்பு மகிழ்ச்சிகரமானதாகவும்,  பயனுள்ளதாகவும் அமைந்திருந்தது. இதன் போது பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மலேசியாவின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சந்திப்பு Read More »

இந்திய கடற்படை கப்பல் (INS) ஷார்தா கொழும்பு வருகை

இந்திய கடற்படையின் INS ஷார்தா, சுகன்யா வகை கடலோர ரோந்து கப்பல் (Offshore Patrol Vessel – OPV), 2026 ஜூன் 10 முதல் 13 வரை Operational Turnaround (OTR) மற்றும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படை பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்திற்காக இந்திய இராணுவத்திலிருந்து அனுப்பப்படும் பொருட்களை மாற்றி ஒப்படைக்கும் நோக்கில் கொழும்பிற்கு வருகை தருகிறது.  இப்பொருட்கள் 2026 ஜூன் 16 அன்று பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெறும் உத்தியோகபூர்வ நிகழ்வில் முறையாக கையளிக்கப்படும். கப்பல் கொழும்பை

இந்திய கடற்படை கப்பல் (INS) ஷார்தா கொழும்பு வருகை Read More »

மகனைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த தாய் உயிரிழப்பு; தேடப்பட்டு வந்த சிறுவனும் சடலமாக மீட்பு: கேரளாவில் சோகம்!

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டம், குற்றியாடி (Kuttiady) பகுதியில் மகனைக் காப்பாற்ற முயன்ற தாயும், அவரது 7 வயது மகனும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த உறைவிட முடியாத துயரச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குற்றியாடி பகுதியைச் சேர்ந்த ரம்யா (36) என்ற மருந்தாளர் (Pharmacist), தனது மகன் சிவானந்துடன் (7) ஆற்றங்கரைக்குத் துணி துவைப்பதற்காகச் சென்றுள்ளார். இதன்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் ஆற்று நீரில் கால் தவறி வீழ்ந்துள்ளான். இதனைக் கண்ட தாய் ரம்யா, ஒரு கணமும்

மகனைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த தாய் உயிரிழப்பு; தேடப்பட்டு வந்த சிறுவனும் சடலமாக மீட்பு: கேரளாவில் சோகம்! Read More »