• Home
  • ›
  • உலகச் செய்திகள்
  • ›
  • பெங்களூருவில் 7-வது உலகத் திருக்குறள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (05.07.2026) அன்று கர்நாடக மாநிலம் பெங்களூரு புனித ஜோசப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

பெங்களூருவில் 7-வது உலகத் திருக்குறள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (05.07.2026) அன்று கர்நாடக மாநிலம் பெங்களூரு புனித ஜோசப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாளராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். “திருக்குறள் உணர்த்தும் உலக அமைதியும் மாந்தநேய மாண்புகளும்” என்ற பிரதான தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இம்மாநாட்டில், தமிழ்மறையின் உலகளாவிய வாழ்வியல் நெறிகள் மற்றும் மாந்தநேயக் கருத்துகள் குறித்து அவர் தனது சிறப்புரையை நிகழ்த்தினார்.”

விழாவிற்குப் புனித ஜோசப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அருட்திரு விக்டர் லோபோ எஸ்.ஜே. தலைமை தாங்கினார். தமிழ்நாடு அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.தென்னரசு, இந்திய விண்வெளி ஆய்வு மைய மேனாள் இயக்குநர் பத்மஸ்ரீ முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறீதரன், பெங்களூரு திருவள்ளுவர் சங்கத் தலைவர் முனைவர் எஸ். டி. குமார் உள்ளிட்ட பல சர்வதேச முக்கியப் பிரமுகர்களும், உலகளாவிய தமிழறிஞர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் அசல் புத்தகங்களின் கண்காட்சி, கர்நாடக ரக்‌ஷண வேதிகே தலைவர் திரு. நாராயண கௌடா அவர்களால் வெளியிடப்பட்ட கன்னட திருக்குறள் மழலையர் நூல் வெளியீடு மற்றும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரும் முக்கிய தீர்மானங்கள் இம்மாநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளாக அமைந்தன. இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச மாநாட்டைப் புனித ஜோசப் பல்கலைக்கழகம், பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் மற்றும் தாய்மொழிக் கூட்டமைப்பு (கர்நாடகம்) ஆகிய அமைப்புகள் இணைந்து மிக நேர்த்தியாக ஒருங்கிணைத்திருந்தன.

Share the Post: