Filter posts by category

உள்ளூர் செய்திகள்

புலமைப்பரிசிலில் மாகாண மட்டத்தில் முதலிடம் பிடித்த அல்-மனார் மாணவிக்கு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கௌரவம்

பாறுக் ஷிஹான் 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்று, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழிமூலத்தில் முதலாமிடத்தையும், கல்முனைக் கல்வி வலயத்தில் முதன்மை இடத்தையும் பெற்றுச் சாதனை படைத்த மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மாணவி செல்வி முஹாஜிர் லிபா பாத்திமாவுக்குக் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் விசேட பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நேற்று (07) நடைபெற்ற இந்நிகழ்வில்இ கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.

புலமைப்பரிசிலில் மாகாண மட்டத்தில் முதலிடம் பிடித்த அல்-மனார் மாணவிக்கு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கௌரவம் Read More »

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

பாறுக் ஷிஹான் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி (SLEAS III) அருட்தந்தை ஜெ. லெபோன் சுதன்  நேற்று (07) உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இப்பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றிய அருட்சகோதரர் எஸ்.ஈ. ரெஜினோல்ட் (FSC) ஓய்வுபெற்றுச் சென்றதைத் தொடர்ந்து, கல்லூரியின் பிரதி அதிபராகக் கடமையாற்றிய ஏ. சுமன் பதில் அதிபராகப் பொறுப்பேற்றுச் செயற்பட்டு வந்தநிலையிலேயே புதிய அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு Read More »

அம்பாறையில் குடியிருப்புப் பகுதிக்குள் புகும் யானைகள்: மக்கள் பீதி!

மனித-யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் தீவிர அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களை அண்மித்துள்ள விவசாய நிலங்கள், மக்கள் குடியிருப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளை நோக்கி இரவு நேரங்களில் காட்டு யானைகள் ஊடுருவுகின்றன. இதனால் விவசாயிகள்

அம்பாறையில் குடியிருப்புப் பகுதிக்குள் புகும் யானைகள்: மக்கள் பீதி! Read More »

கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளரா, பிரதேச செயலாளரா? மேன்முறையீட்டு நீதிமன்றில் அம்பலமான முக்கிய திருப்பம்!பிரதிவாதித் தரப்பும் அரசுத் தரப்பும் நீதிமன்றில் ஒப்புக்கொண்ட விடயம்

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் பதவி நிலை மற்றும் அதிகாரங்கள் தொடர்பான எழுத்தாணை மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அங்கு கடமையாற்றுபவர் ஒரு “உப பிரதேச செயலாளர்” மட்டுமே தவிர, அவர் “பிரதேச செயலாளர்” அல்ல என்ற முக்கிய திருப்பம் திறந்த நீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. நீதியரசர்களான மாயாதுன்ன கோரேயா மற்றும் எம்.சி.எல்.பி. கோபல்லவா ஆகியோர் முன்னிலையில் நேற்று (07) இக்கூட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நீதிமன்றில் நடைபெற்ற வழக்கின் விவரங்கள்:கல்முனையன்ஸ்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளரா, பிரதேச செயலாளரா? மேன்முறையீட்டு நீதிமன்றில் அம்பலமான முக்கிய திருப்பம்!பிரதிவாதித் தரப்பும் அரசுத் தரப்பும் நீதிமன்றில் ஒப்புக்கொண்ட விடயம் Read More »

கல்முனையில் 160 ஆவது பொலிஸ் தின நிகழ்வு- பள்ளிவாசலில் சிறப்பு துஆப் பிரார்த்தனை-

பிரதம அதிதியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்ச்சி பங்கேற்பு பாறுக் ஷிஹான் 160 ஆவது பொலிஸ் தின விழாவை முன்னிட்டு கல்முனையில் விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி களுவாராச்சியின் தலைமையில், கல்முனை பொலிஸ் ஆலோசனைக் குழுவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஐ.எம். ஜிப்ரியின் நெறிப்படுத்தலில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்முனை முகையதீன் பள்ளிவாசலில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு அல்-ஹாஜ் உஸ்தாத் மெளலவி சபா முஹம்மத் ஆலிம் நஜாஹி

கல்முனையில் 160 ஆவது பொலிஸ் தின நிகழ்வு- பள்ளிவாசலில் சிறப்பு துஆப் பிரார்த்தனை- Read More »

மட்டு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பிடம் மதுபானத்துடன் வசமாக மாட்டிக்கொண்ட வன பரிபாலன சபை பொறுப்பாளர்,சாரதி—–    

(க.சரவணன்) அரச திணைக்களங்கள் லீவு நாளான ஞாயிற்றுக்கிழமை(06) வன பரிபாலன சபைக்கு சொந்தமான டபிள்கப் வாகனத்தை எடுத்துக்கொண்டு மாவட்ட புதிய செயலகத்துக்கு செல்லும் வழியிலே பாலமீன்மடு வில் அமைந்துள்ள ஒரு தென்னந் தோட்டத்தில் திணைக்களத்தின் சீருடையை அணிந்து கொண்ட இருவர் மதுபானங்களை  எடுத்து கொண்டு   அதை குடித்துவிட்டு நிறை வெறியில் அந்த வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளனர் இது வீதியில் பயணிக்கும் மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் செயல். எனவே அரச வாகனத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்தியது மட்டுமல்லாது

மட்டு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பிடம் மதுபானத்துடன் வசமாக மாட்டிக்கொண்ட வன பரிபாலன சபை பொறுப்பாளர்,சாரதி—–     Read More »

மூதூரில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு

ஹஸ்பர் ஏ.எச்- வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இயங்கி வருகின்ற புகழிடம் நிறுவனத்தின் அனுசரணையில், மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், சமூக சேவைப் பிரிவினால் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு (2026.09.07) நடைபெற்றது. மூதூர் பிரதேச செயலாளர் எம். ஐ. பிர்னாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்கள்,

மூதூரில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு Read More »

மட்டக்களப்பு ஊழல் மோசடி தொடர்பாக இன்னாள் முன்னாள் எம்.பிக்கள் சிலர் மீது விசாரணை நடைபெறுகின்றது—திருட்டு கும்பலின் தலைவர் ரணில்–தேசிய மக்கள் சக்தி எம்.பி. கந்தசாமி பிரபு காட்டம்

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே ஊழல் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளில் தொடர்புபட்டவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட்டார்கள் சட்டம் தன் கடமையை சுயாதீனமாக செய்யும் என பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை ஊழல் தொடர்பாக ஊடகவியலாளர் கேள்விக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாவட்டத்தைச்

மட்டக்களப்பு ஊழல் மோசடி தொடர்பாக இன்னாள் முன்னாள் எம்.பிக்கள் சிலர் மீது விசாரணை நடைபெறுகின்றது—திருட்டு கும்பலின் தலைவர் ரணில்–தேசிய மக்கள் சக்தி எம்.பி. கந்தசாமி பிரபு காட்டம் Read More »

மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய  அம்பிட்டிய சுமணரத்திள தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்—

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து கடமைக்கு பங்கம் விளைவித்தல் மற்றும்   நீதிமன்ற பிடியாணை தொடர்பாக கைது செய்யப்பட்ட  மங்களாராமய விகாரையின் விகாராதிகாரி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் திங்கட்கிழமை (7) உத்தரவிட்டார். கடந்த ஆகஸ்ட் 31ம் திகதி மட்டக்களப்பு சென்றல்  வீதியில்  அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து, அங்குள்ள அரசு ஊழியர்களின் கடமைக்கு இடையூறு

மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய  அம்பிட்டிய சுமணரத்திள தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்— Read More »

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுப்படுத்தும் செயற்றிட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுப்படுத்தும் நோக்குடன் ஏழு குடும்பங்களுக்கு உதவி வழங்கி திங்கட்கிழமை(07.09.2026)  வைக்கப்பட்டது சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக இவ்வேலைத் திட்டம்  முன்னெடுக்கப்படுவதாக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் க.தங்கத்துரை இதன்போது தெரிவித்தார் இதன் போது ஏழு குடும்பங்களுக்கும் தலா 75000 ரூபா பெறுமதியான கால்நடை உற்பத்தி திணைக்களத்தின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட நான்கு மாத கோழிகள் வழங்கி வைக்கப்பட்டன. பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தியின் திட்டமிடலில் நடை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுப்படுத்தும் செயற்றிட்டம். Read More »