Filter posts by category

உள்ளூர் செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் UNESCO மற்றும் World Vision இணைந்து சமூக மட்ட அமைப்புக்களை வலுவூட்டும் செயற்திட்டம்

Kanagaraja Saravanan மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்ட அமைப்புக்களை வலுவூட்டுவதற்கான செயற்திட்டம் தொடர்பான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் (10) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் UNESCO நிறுவனத்தின் தேசிய திட்ட அதிகாரி சாருதத் ஏக்கநாயக்க பங்குபற்றுதலுடன் திட்ட இணைப்பாளர் எஸ். சிவசுப்பிரமணியம் ஏற்பாட்டில் இக்கலந்துரையால் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் சாந்த

மட்டக்களப்பு மாவட்டத்தில் UNESCO மற்றும் World Vision இணைந்து சமூக மட்ட அமைப்புக்களை வலுவூட்டும் செயற்திட்டம் Read More »

 COFI37 அமர்வில் இலங்கையின் மீன்வளக் கொள்கை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய முன்மொழிவுகள்

vadivel shagthivel ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைமையகத்தில் நடைபெற்று வரும் மீன்வளக் குழுவின் 37ஆவது அமர்வில் (COFI37), இலங்கை தனது தேசிய மீன்வளக் கொள்கை முன்னுரிமைகள், கடல் வளங்களின் நிலையான முகாமைத்துவம், சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய மீன்வள ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நடைபெறும் இந்த முக்கிய சர்வதேச அமர்வில், உலக மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பின் நிலைமை தொடர்பான SOFIA 2026 அறிக்கை, சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடியை கட்டுப்படுத்துதல், காலநிலை மாற்றத்திற்கான தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள், சிறிய அளவிலான மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கு ஆதரவு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படுகின்றன. இந்த அமர்வில் இலங்கையின் சார்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச கலந்துகொண்டு, இலங்கையின் மீன்வளத்துறையின் தற்போதைய நிலை, இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக இலங்கையின் நிலைப்பாடுகளையும் முக்கிய கருத்துக்களையும் முன்வைத்தார். அத்துடன், வங்காள விரிகுடா அரசுகளுக்கிடையேயான அமைப்பான BOBP-IGO-வின் தலைமைப் பொறுப்பிலும் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவுகள் உள்ளிட்ட உறுப்பு நாடுகளுக்கிடையிலான பிராந்திய மீன்வள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன்

 COFI37 அமர்வில் இலங்கையின் மீன்வளக் கொள்கை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய முன்மொழிவுகள் Read More »

உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் புதிய அதிபர் பதவியேற்பு..!

(ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் புதிய அதிபராக  சோமசுந்தரம் கங்கேஸ்வரன் (SLPS-I) அவர்கள் புதன்கிழமை ( 09.09.2026 ) உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டார். இவர் முன்னதாக குப்புறுப்பிட்டி மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபராகவும், குச்சவெளி கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். கடந்த ஒரு வருட காலமாக கல்லூரியின் பதில் அதிபராகக் கடமையாற்றிய திருமதி. தமிழரசி விஷ்ணுக்குமார் அவர்களிடமிருந்து புதிய அதிபர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.  அவருடைய அர்ப்பணிப்பான சேவையைப்

உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் புதிய அதிபர் பதவியேற்பு..! Read More »

இந்திய கடற்படைக் கப்பல் INS Udaygiri கொழும்பு விஜயம்: 8–11

ஹஸ்பர் ஏ.எச்- இந்தியக் கடற்படையின் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட பல்நோக்கு ஸ்டெல்த் போர்க்கப்பலான INS Udaygiri, மூன்று நாள் Operational Turnaround (OTR) விஜயத்தை மேற்கொள்வதற்காக 08 செப்டம்பர் 2026 அன்று கொழும்பை வந்தடைந்தது. இக்கப்பலின் விஜயம், இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் இலங்கைக்கு மேற்கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்துடன் ஒருங்கிணைந்துள்ளது. இவ்விஜயத்தின் நோக்கம், இலங்கை கடற்படையுடன் தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் Mobile Training Team மூலம் அனுபவப் பகிர்வுகளை மேற்கொள்வதன் ஊடாக இருதரப்பு ஒத்துழைப்பை

இந்திய கடற்படைக் கப்பல் INS Udaygiri கொழும்பு விஜயம்: 8–11 Read More »

இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்கான தொழில் சந்தை

A.H.HASFAR HASFARதிருகோணமலை மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழில் மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட தொழில் சந்தை (08) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. தொழில் அமைச்சு, மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் சிறுவர் நிதியம் ஆகியவற்றின் அனுசரணையுடன், திருகோணமலை மாவட்ட தொழில் நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தொழில் சந்தையில், இராணுவம், கடற்படை,

இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புக்கான தொழில் சந்தை Read More »

வீ. ஆனந்தசங்கரியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

vadivel shagthivel கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை (08.09.2026) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, வீ. ஆனந்தசங்கரியின் உடல்நலம் மற்றும் நலன் குறித்து அமைச்சர் அன்புடன் விசாரித்ததுடன், அவரது தற்போதைய நிலைமை தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார். இச்சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய நிலைமை, வடக்கு மக்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இருவரும் சுமுகமான முறையில் கலந்துரையாடினர். நீண்டகால அரசியல் அனுபவத்தைக் கொண்ட வீ. ஆனந்தசங்கரியை சந்தித்து அவருடன் கலந்துரையாடியமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

வீ. ஆனந்தசங்கரியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Read More »

மட்டக்களப்பில் நாமல் ராபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன்  விசேட பூஜை வழிபாடு

(க.சரவணன்) மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ பொதுஜன பெரமுன கட்சி தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு செவ்வாய்க்கிழமை (8) புன்னைச்சோலை காளி கோயில் மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் ஏற்பாட்டில் இடம்பெற்றது. கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ மக்களின் அரசியலுக்காக வெகுவிரைவில் பயணிக்க உள்ள அவருக்கு நல்லாசி வேண்டி மட்டக்களப்பு பூராகவும் அனைத்து மத தலங்களுக்கும் சென்று ஆசீர்வாதத்தை பெறுவதற்காக திட்டமிட்டுள்ளோம் அதன் பிரகாரம் இன்று மட்டு

மட்டக்களப்பில் நாமல் ராபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன்  விசேட பூஜை வழிபாடு Read More »

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு தொடர்ந்து 11 வரை  விளக்கமறியல்—

 (கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து கடமைக்கு பங்கம் விளைவித்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட  மங்களாராமய விகாரையின் விகாராதிகாரி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தொடர்ந்து 11ம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்  செவ்வாய்க்கிழமை (8) உத்தரவிட்டார். கடந்த ஆகஸ்ட் 31ம் திகதி மட்டக்களப்பு சென்றல்  வீதியில்  அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து, அங்குள்ள அரசு ஊழியர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு தொடர்ந்து 11 வரை  விளக்கமறியல்— Read More »

மாற்றுத் திறனாளிகளுக்கான  தலைமைத்துவ மற்றும் சமூகப் பொருளாதார வலுவூட்டல் நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச்- தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கி வரும் மருதம் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கான தலைமைத்துவ மற்றும் சமூகப் பொருளாதார வலுவூட்டல் நிகழ்வு (07.09.2026)மாலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் ஊடாக புதுக்குடியிருப்பு கிராம சேவையாளர் கட்டிடத்தில் இடம்பெற்றது. மாற்றுத் திறனாளிகளின் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துதல், அவர்களின் சமூகப் பங்கேற்பை அதிகரித்தல் மற்றும் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வளவாளராக தம்பலகாமம்- பிரதேச செயலக

மாற்றுத் திறனாளிகளுக்கான  தலைமைத்துவ மற்றும் சமூகப் பொருளாதார வலுவூட்டல் நிகழ்வு Read More »

சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டம் மூலம் மாணவர்கள் கௌரவிப்பு

ஹஸ்பர் ஏ.எச்- சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் தரம் 05புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பணப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். தம்பலாகாமம் பிரதேச செயலகம் ஊடாக, தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன்  தலைமையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வொன்றில், தம்பலகாமம் பிரதேசத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு நிதியுதவி மற்றும் குறித்த கௌரவம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு (07.09.2026) மாலை தம்பலகாமம் பிரதேச

சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டம் மூலம் மாணவர்கள் கௌரவிப்பு Read More »