(க.சரவணன்)
மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ பொதுஜன பெரமுன கட்சி தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு செவ்வாய்க்கிழமை (8) புன்னைச்சோலை காளி கோயில் மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ மக்களின் அரசியலுக்காக வெகுவிரைவில் பயணிக்க உள்ள அவருக்கு நல்லாசி வேண்டி மட்டக்களப்பு பூராகவும் அனைத்து மத தலங்களுக்கும் சென்று ஆசீர்வாதத்தை பெறுவதற்காக திட்டமிட்டுள்ளோம் அதன் பிரகாரம் இன்று மட்டு புன்னைச்சோலை காளி கோயில் இந்த விசேட ஆசீர்வாத பூஜையை இன்று ஆரம்பித்துள்ளதாக மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் தெரிவித்தார்.

Post Views: 37




