• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கல்முனையில் 160 ஆவது பொலிஸ் தின நிகழ்வு- பள்ளிவாசலில் சிறப்பு துஆப் பிரார்த்தனை-

கல்முனையில் 160 ஆவது பொலிஸ் தின நிகழ்வு- பள்ளிவாசலில் சிறப்பு துஆப் பிரார்த்தனை-

பிரதம அதிதியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராய்ச்சி பங்கேற்பு

பாறுக் ஷிஹான்

160 ஆவது பொலிஸ் தின விழாவை முன்னிட்டு கல்முனையில் விசேட துஆப் பிரார்த்தனை நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி களுவாராச்சியின் தலைமையில், கல்முனை பொலிஸ் ஆலோசனைக் குழுவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஐ.எம். ஜிப்ரியின் நெறிப்படுத்தலில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்முனை முகையதீன் பள்ளிவாசலில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு அல்-ஹாஜ் உஸ்தாத் மெளலவி சபா முஹம்மத் ஆலிம் நஜாஹி முகத்தமுல் காதிரி தலைமை தாங்கி துஆப் பிரார்த்தனையை வழிநடத்தினார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்   கஸ்தூரி ஆராச்சியும், கெளரவ அதிதியாக உதவி பொலிஸ் அத்தியட்சகர்   விக்ரமரட்னவும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் பொலிஸ் ஆலோசகக் குழு உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், உலமாக்கள், மௌலவிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share the Post: