• Home
  • உள்ளூர் செய்திகள்
  • மட்டு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பிடம் மதுபானத்துடன் வசமாக மாட்டிக்கொண்ட வன பரிபாலன சபை பொறுப்பாளர்,சாரதி—–    

மட்டு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பிடம் மதுபானத்துடன் வசமாக மாட்டிக்கொண்ட வன பரிபாலன சபை பொறுப்பாளர்,சாரதி—–    

(க.சரவணன்)

அரச திணைக்களங்கள் லீவு நாளான ஞாயிற்றுக்கிழமை(06) வன பரிபாலன சபைக்கு சொந்தமான டபிள்கப் வாகனத்தை எடுத்துக்கொண்டு மாவட்ட புதிய செயலகத்துக்கு செல்லும் வழியிலே பாலமீன்மடு வில் அமைந்துள்ள ஒரு தென்னந் தோட்டத்தில் திணைக்களத்தின் சீருடையை அணிந்து கொண்ட இருவர் மதுபானங்களை  எடுத்து கொண்டு   அதை குடித்துவிட்டு நிறை வெறியில் அந்த வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளனர் இது வீதியில் பயணிக்கும் மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் செயல்.

எனவே அரச வாகனத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்தியது மட்டுமல்லாது மதுபோதைக்கு பயன்படுத்திய இரு அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பு  கேட்டுக் கொள்கிறேன் என்றார். 

Share the Post: