ஹஸ்பர் ஏ.எச்-
வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இயங்கி வருகின்ற புகழிடம் நிறுவனத்தின் அனுசரணையில், மூதூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், சமூக சேவைப் பிரிவினால் தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு (2026.09.07) நடைபெற்றது.
மூதூர் பிரதேச செயலாளர் எம். ஐ. பிர்னாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்கள், புகழிடம் நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.



Post Views: 42




