admin

பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் முற்றுகைஆணும் பெண்ணும் கைது

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நவகிரிஆறு  வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல   போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின்கீழ்  பக்கிஎல்லை  சிறப்புப் பணியக பொலிஸ் சார்ஜென்ட் சமரநாயக்க (32407) என்பவருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சோதனை முன்னெடுக்கப்பட்டது. இச்சோதனையின்போது

பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் முற்றுகைஆணும் பெண்ணும் கைது Read More »

சீரற்ற வானிலையையும் பொருட்படுத்தாது க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு ஆர்வத்துடன் சமூகமளித்த ஹட்டன் மாணவர்கள்!

நாடு முழுவதும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) வெற்றிகரமாக ஆரம்பமானது. இன்றைய தினத்திலிருந்து ஒரு மாத காலத்திற்கு இப் பரீட்சைகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன. ஹட்டன் கல்வி வலயம் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் இன்று காலையில் கடுமையான சீரற்ற வானிலை நிலவிய போதிலும், மாணவர்கள் அதைப் பொருட்படுத்தாது மிகுந்த ஆர்வத்துடன் அதிகாலையிலேயே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்ததை அவதானிக்க முடிந்தது. இயற்கை விடுத்த சவால்களுக்கு மத்தியிலும், தமது பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும்

சீரற்ற வானிலையையும் பொருட்படுத்தாது க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு ஆர்வத்துடன் சமூகமளித்த ஹட்டன் மாணவர்கள்! Read More »

அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள் விற்பனை: ஹெட்டிபொலவில் 3 விற்பனையாளர்களுக்கு அபராதம்

குருநாகல், ஹெட்டிபொல பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட முகவர் விலையை விடக் கூடுதல் விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த மற்றும் விலைப் பட்டியலை நடைமுறைப்படுத்தத் தவறிய மூன்று விற்பனை நிலையங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அபராதம் விதித்துள்ளது. சந்தையில் மோட்டார் சைக்கிள்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், விநியோகக் குறைபாட்டைப் பயன்படுத்தி சில வர்த்தகர்கள் அதிக விலைக்கு மறுவிற்பனை செய்வதாகக் கிடைத்த புகார்களைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 27 அன்று அதிகாரசபையினால் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, வேறு

அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள் விற்பனை: ஹெட்டிபொலவில் 3 விற்பனையாளர்களுக்கு அபராதம் Read More »

இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் சந்திப்பு: அதிகாரப் பகிர்வு மற்றும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் திரு. விக்ரம் மிஸ்ரி அவர்களுடனான உயர்நிலைச் சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பின் போது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் பிரதேச ஆளுகை சார்ந்த முக்கிய சவால்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு நீடித்த மற்றும் நீதியான அரசியல் தீர்வின் அவசியத்தை வலியுறுத்திய பிரதிநிதிகள், அரசியலமைப்பின் அடிப்படையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் சந்திப்பு: அதிகாரப் பகிர்வு மற்றும் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை! Read More »

டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி: பொத்துவிலில் விழிப்புணர்வுப் பேரணி பிரம்மாண்டமாக ஆரம்பம்!

டெங்கு நோயற்ற, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகமொன்றை கட்டியெழுப்பும் உயரிய நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் “கிழக்கு மாகாண டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தின்” அம்பாறை மாவட்ட இறுதி நாள் நிகழ்வு (09) பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து வெகு விமர்சையாக ஆரம்பமானது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் இளைஞர் காங்கிரஸின் அமைப்பாளர் பி. பசூர்கான் அவர்களின் சீரிய ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது. முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபைத்

டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி: பொத்துவிலில் விழிப்புணர்வுப் பேரணி பிரம்மாண்டமாக ஆரம்பம்! Read More »

நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை பேரணி

ஹஸ்பர் ஏ ஹலீம் – “நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை” என்ற தொனிப்பொருளில் தேசிய நேர்மை வாரம் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுடன், திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் இன்று (09) இந்நிகழ்வு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மூன்றாம் கட்டை ,சோழையடி பைரவர் கோயிலிலிருந்து நடைபயணம் ஆரம்பமாகி,

நேர்மையின் கலாசாரம் – தூய்மையான இலங்கை பேரணி Read More »

நாமல் ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க மட்டக்களப்பு வாழ் மக்கள் அனைவரும் கைகோர்க்க– மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் அழைப்பு

கனகராஜா சரவணன்) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பின்னால்; நாடு பூராகவும் உண்மையான மக்கள் அலை திரண்டு கொண்டிருக்கின்றனர். எனவே அவர் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம். மக்கள் அவருக்கு சரியான நேரத்தில் தீர்மானத்தை வழங்குவார்கள் எனவே அவர் தலைமையில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க மட்டக்களப்பு வாழ் மக்கள் அனைவரும் என்னுடன் கை கோர்த்து பயணிக்குமாறு  சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்  அழைப்பு விடுத்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க மட்டக்களப்பு வாழ் மக்கள் அனைவரும் கைகோர்க்க– மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் அழைப்பு Read More »

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானை அச்சுறுத்தல் உள்ள மாணவர்களுக்காக விசேட பரிட்சை இணைநிலையங்கள் அமைப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் அமைதியான முறையில் இன்று நடைபெற்றது. மாணவர்கள் இறை ஆசிர்வாதம் வேண்டி ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்து பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்தது. மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் இன்று காலை அமைதியான முறையில் பரீட்சைகள் நடைபெற்றன. இந்த கல்வி வலையத்தில் காட்டு யானை அச்சுறுத்தல் உள்ள மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன இதேவேளை பட்டிருப்பு கல்வி

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானை அச்சுறுத்தல் உள்ள மாணவர்களுக்காக விசேட பரிட்சை இணைநிலையங்கள் அமைப்பு Read More »

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டியத்துடன் கோலாகலமாக நடைபெற்ற அரச உத்தியோகத்தர் திருவிழா!

(கனகராஜா சரவணன்  வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் 14 ஆம் நாளான ‘அரச உத்தியோகத்தர் திருவிழா’ (08) சனிக்கிழமை மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. இத் திருவிழாவைச் சிறப்பிக்கும் வகையில், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். உதயகுமார் அவர்களின் தலைமையில் ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு ஆலயத்தின் வெளிவீதி முன்றலில் நடைபெற்றது.  பிரதேச செயலாளர் திரு. த. கஜேந்திரன் அவர்களின்

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டியத்துடன் கோலாகலமாக நடைபெற்ற அரச உத்தியோகத்தர் திருவிழா! Read More »

யாழ்ப்பாண CSI பேராயரை பிரதி அமைச்சர் பிரதீப் சந்தித்தார்

இலங்கை தென்னிந்திய திருச்சபை (Jaffna Diocese of the Church of South India – JDCSI) யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் பேராயர் அருட்பெருந்திரு கலாநிதி வி. பத்மதயாளன் அவர்களை, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள், யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக இன்று (09.08.2026)சந்தித்தார். இச்சந்திப்பின் போது, சமய நல்லிணக்கம், சமூக முன்னேற்றம், மக்கள் நலன் மற்றும் வடக்கு மக்களின் அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள்

யாழ்ப்பாண CSI பேராயரை பிரதி அமைச்சர் பிரதீப் சந்தித்தார் Read More »