யாழ்ப்பாண CSI பேராயரை பிரதி அமைச்சர் பிரதீப் சந்தித்தார்

இலங்கை தென்னிந்திய திருச்சபை (Jaffna Diocese of the Church of South India – JDCSI) யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் பேராயர் அருட்பெருந்திரு கலாநிதி வி. பத்மதயாளன் அவர்களை, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள், யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக இன்று (09.08.2026)சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, சமய நல்லிணக்கம், சமூக முன்னேற்றம், மக்கள் நலன் மற்றும் வடக்கு மக்களின் அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து இருவருக்குமிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் இணைப்பாளரும், யாழ். மாநகர சபை உறுப்பினருமான சுந்தரமூர்த்தி கபிலனும் கலந்துகொண்டார்.

Share the Post:

Related Posts