August 9, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானை அச்சுறுத்தல் உள்ள மாணவர்களுக்காக விசேட பரிட்சை இணைநிலையங்கள் அமைப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் அமைதியான முறையில் இன்று நடைபெற்றது. மாணவர்கள் இறை ஆசிர்வாதம் வேண்டி ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்து பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்தது. மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் இன்று காலை அமைதியான முறையில் பரீட்சைகள் நடைபெற்றன. இந்த கல்வி வலையத்தில் காட்டு யானை அச்சுறுத்தல் உள்ள மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன இதேவேளை பட்டிருப்பு கல்வி […]

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானை அச்சுறுத்தல் உள்ள மாணவர்களுக்காக விசேட பரிட்சை இணைநிலையங்கள் அமைப்பு Read More »

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டியத்துடன் கோலாகலமாக நடைபெற்ற அரச உத்தியோகத்தர் திருவிழா!

(கனகராஜா சரவணன்  வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் 14 ஆம் நாளான ‘அரச உத்தியோகத்தர் திருவிழா’ (08) சனிக்கிழமை மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. இத் திருவிழாவைச் சிறப்பிக்கும் வகையில், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். உதயகுமார் அவர்களின் தலைமையில் ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு ஆலயத்தின் வெளிவீதி முன்றலில் நடைபெற்றது.  பிரதேச செயலாளர் திரு. த. கஜேந்திரன் அவர்களின்

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் 1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டியத்துடன் கோலாகலமாக நடைபெற்ற அரச உத்தியோகத்தர் திருவிழா! Read More »

யாழ்ப்பாண CSI பேராயரை பிரதி அமைச்சர் பிரதீப் சந்தித்தார்

இலங்கை தென்னிந்திய திருச்சபை (Jaffna Diocese of the Church of South India – JDCSI) யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் பேராயர் அருட்பெருந்திரு கலாநிதி வி. பத்மதயாளன் அவர்களை, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள், யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக இன்று (09.08.2026)சந்தித்தார். இச்சந்திப்பின் போது, சமய நல்லிணக்கம், சமூக முன்னேற்றம், மக்கள் நலன் மற்றும் வடக்கு மக்களின் அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள்

யாழ்ப்பாண CSI பேராயரை பிரதி அமைச்சர் பிரதீப் சந்தித்தார் Read More »

மட்டு மாநகர சபை சுகாதார தொண்டர் நியமனத்தில் முறைகேடு உடனடி விசாரணை கோரி கிழக்கு ஆளுநருக்கு  ஈ.பி.டி.பி. கட்சி அந்தனிசில் ராஜ்குமார் அனுப்பிவைப்பு-

  (கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிதாக சுகாதார தொண்டர் 16 ஆட்சேர்ப்பில்  முறைகேடு இடம்பெற்றிருக்கின்றது எனவே இது தொடர்பாக துரிதமாக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவசரமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும். மக்கள் வாக்களித்து சபைக்கு அனுப்பியது  புட்டு, பூந்தியின் விலைகளை நிர்ணயிக்க அல்ல என்பதுடன் விதவை ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாடாக கருதுகின்றோம் என ஈ.பி.டி.பி. கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார். மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள

மட்டு மாநகர சபை சுகாதார தொண்டர் நியமனத்தில் முறைகேடு உடனடி விசாரணை கோரி கிழக்கு ஆளுநருக்கு  ஈ.பி.டி.பி. கட்சி அந்தனிசில் ராஜ்குமார் அனுப்பிவைப்பு- Read More »

சம்மாந்துறையில் சோகம்: ‘அத்தம’ கூட்டுப் பணியின் போது மாரடைப்பால் ஆசிரியர் திடீர் மரணம்!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மஜீத்புரம் கிராமத்தில் நேற்று (08) இடம்பெற்ற ‘அத்தம’ சமூகக் கூட்டுப் பணி (சிரமதான) நிகழ்வின் போது ஆசிரியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மல்வத்தை 03 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெற்ற இந்த சிரமதானப் பணியில், சம்மாந்துறை மஜீத்புரம் வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த மீரா முகைதீன் தௌபீக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சமூகம் சார்ந்த இந்தச் சிரமதானப் பணியில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று

சம்மாந்துறையில் சோகம்: ‘அத்தம’ கூட்டுப் பணியின் போது மாரடைப்பால் ஆசிரியர் திடீர் மரணம்! Read More »

10ஆவது ஆண்டு சர்வதேச அருகம்பே மரதன் ஓட்டப் பந்தயம் கோலாகலமாக ஆரம்பம்!

பொத்துவில்: பொத்துவில், அருகம்பே சர்வதேச மரதன் ஓட்டப் பந்தயத்தின் (Arugam Bay Marathon) 10ஆவது ஆண்டுப் பதிவின் தொடக்க நிகழ்வு இன்று (09) காலை 6.00 மணிக்கு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதிகாலையிலேயே பெரும் உற்சாகத்துடன் களைகட்டியுள்ள இந்நிகழ்வில் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பந்தயத்தை ஆரம்பித்து வைத்தனர். அருகம்பே அபிவிருத்தி மன்றத்தின் (Arugambay Development Forum) ஏற்பாட்டில் மிகச் சிறப்பான முறையில் இந்த சர்வதேச மரதன் ஓட்டப் போட்டி ஒருங்கிணைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

10ஆவது ஆண்டு சர்வதேச அருகம்பே மரதன் ஓட்டப் பந்தயம் கோலாகலமாக ஆரம்பம்! Read More »

5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில்

          5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை இன்று (09) காலை நாடளாவிய ரீதியில் ஆரம்பமான நிலையில் அம்பாரை மாவட்டத்திலும் பல்வேறு பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீPP இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையத்திற்கு செல்வதற்காக இன்று காலை  ஆர்வத்துடன் பெற்றோர்களுடன் மாணவர்கள் காத்திருந்ததை காண முடிந்தது. இதேநேரம் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை ஒழுங்குபடுத்தி பரீட்சை நிலையத்திற்கு அனுப்புவதற்கான பணியை அன்னை சாரதா பாடசாலையின் அதிபர் தலைமையிலான

5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் Read More »

உழைப்பால் அனைவரும் சமம்! சாய்ந்தமருதில் கோலாகலமாக ஆரம்பமானது ‘அத்தம’ கூட்டு உழைப்புத் திட்டம்!

சமூகத்தில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி “உழைப்பால் அனைவரும் சமம்” என்ற சமத்துவச் சிந்தனையை கட்டியெழுப்பும் நோக்கில், அரசாங்கத்தின் “க்ளீன் ஸ்ரீ லங்கா” கொள்கைத் திட்டத்தின் கீழ் ‘அத்தம’ தேசிய வேலைத்திட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் இன்று (08) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆசீக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புத் தலைவருமான ஏ. ஆதம்பாவா பிரதம

உழைப்பால் அனைவரும் சமம்! சாய்ந்தமருதில் கோலாகலமாக ஆரம்பமானது ‘அத்தம’ கூட்டு உழைப்புத் திட்டம்! Read More »

நாடு முழுவதும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கோலாகலம்-அம்பாறை மாவட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

பொலிஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் ஆரம்பமானது பரீட்சை பாறுக் ஷிஹான் இலங்கை முழுவதும் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) காலை நாடு தழுவிய ரீதியில் அமைதியாகவும், சுமுகமான முறையிலும் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை நிலையங்களில் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றனர். வினாத்தாள்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் எவ்வித பதற்றமுமின்றி நம்பிக்கையுடன் பரீட்சை எழுதுவதை அவதானிக்க முடிந்தது. பரீட்சை நடவடிக்கைகளை எவ்வித இடையூறுகளுமின்றி மிகவும் நேர்த்தியாக நடத்துவதற்காக,

நாடு முழுவதும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கோலாகலம்-அம்பாறை மாவட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு Read More »

மூதூரில் ACF நிறுவனத்தின் 17 மனிதாபிமானப் பணியாளர்களின் 20வது ஆண்டு நினைவேந்தல் – சர்வதேச சுயாதீன விசாரணைக்கு பலமான வலியுறுத்தல்!

“மனித நேயத்திற்காக அர்ப்பணித்த உயிர்களை என்றும் மறவோம்; அவர்களின் தியாகம் எம் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும்” எனும் தொனிப்பொருளில், படுகொலை செய்யப்பட்ட பட்டிணிக்கு எதிரான சர்வதேச அமைப்பின் (Action Against Hunger – ACF) 17 மனிதாபிமானப் பணியாளர்களின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பொது அமைப்புக்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட பணியாளர்களின் உறவினர்களின் ஒருங்கிணைப்பில், இன்று (08.08.2026) திருகோணமலை, மூதூர் கலாசார மண்டபத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாட்டாளர்களின் விசேட அழைப்பின் பேரில்,

மூதூரில் ACF நிறுவனத்தின் 17 மனிதாபிமானப் பணியாளர்களின் 20வது ஆண்டு நினைவேந்தல் – சர்வதேச சுயாதீன விசாரணைக்கு பலமான வலியுறுத்தல்! Read More »