• Home
  • உள்ளூர் செய்திகள்
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானை அச்சுறுத்தல் உள்ள மாணவர்களுக்காக விசேட பரிட்சை இணைநிலையங்கள் அமைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானை அச்சுறுத்தல் உள்ள மாணவர்களுக்காக விசேட பரிட்சை இணைநிலையங்கள் அமைப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் அமைதியான முறையில் இன்று நடைபெற்றது.

மாணவர்கள் இறை ஆசிர்வாதம் வேண்டி ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்து பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் இன்று காலை அமைதியான முறையில் பரீட்சைகள் நடைபெற்றன.

இந்த கல்வி வலையத்தில் காட்டு யானை அச்சுறுத்தல் உள்ள மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன

இதேவேளை பட்டிருப்பு கல்வி வலையத்திற்கு உட்பட்ட திருப் பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்திலும் இன்று காலை பரீட்சைகள் மிக அமைதியான முறையில் இடம்பெற்றன

Share the Post: