• Home
  • உள்ளூர் செய்திகள்
  • சம்மாந்துறையில் சோகம்: ‘அத்தம’ கூட்டுப் பணியின் போது மாரடைப்பால் ஆசிரியர் திடீர் மரணம்!

சம்மாந்துறையில் சோகம்: ‘அத்தம’ கூட்டுப் பணியின் போது மாரடைப்பால் ஆசிரியர் திடீர் மரணம்!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மஜீத்புரம் கிராமத்தில் நேற்று (08) இடம்பெற்ற ‘அத்தம’ சமூகக் கூட்டுப் பணி (சிரமதான) நிகழ்வின் போது ஆசிரியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மல்வத்தை 03 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெற்ற இந்த சிரமதானப் பணியில், சம்மாந்துறை மஜீத்புரம் வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த மீரா முகைதீன் தௌபீக் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சமூகம் சார்ந்த இந்தச் சிரமதானப் பணியில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று உழைத்துக் கொண்டிருந்த வேளையில், அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மீட்கப்பட முயன்றபோதிலும், சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கிராமத்தின் நல்வாழ்வுக்காகவும் மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒரு சிறந்த ஆசிரியரின் இந்தத் திடீர் மறைவு, அப்பகுதி மக்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share the Post: