admin

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை: MP வைத்தியர் இ.சிறிநாத்தின் நிதியில் இயந்திர உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு கிராமத்தில் உள்ள “புதிய பாதை விசேட தேவையுடையோர் அமைப்பு” நிர்வாகிகள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தி‌யர் இளையதம்பி சிறிநாத் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், குறித்த அமைப்பு உறுப்பினர்களின் வாழ்வாதார சுய தொழில் முயற்சியை மேம்படுத்தும் நோக்கில் நெல் மற்றும் மா அரைக்கும் சிறியளவிலான ஆலைக்கான இயந்திர உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 16.09.2026 அன்று கோறளைப்பற்று

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை: MP வைத்தியர் இ.சிறிநாத்தின் நிதியில் இயந்திர உபகரணங்கள் வழங்கி வைப்பு! Read More »

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இளைஞரின் பெற்றோரை (21) முற்பகல் ஜனாதிபதி சந்தித்திருந்தார்.

சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் இயன்றளவு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தலையீடு செய்யும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். குறிப்பாக, சவூதி அரசரிடம் இது தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குமாறு இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூல கோரிக்கையை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இங்கு ஜனாதிபதி குறிப்பிட்டார். மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்தல் உள்ளிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடாக இதுவரை உத்தியோகபூர்வமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு அவரின் பெற்றோருக்குத் தெரிவித்ததுடன், குறித்த நடவடிக்கைகள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இளைஞரின் பெற்றோரை (21) முற்பகல் ஜனாதிபதி சந்தித்திருந்தார். Read More »

கல்முனை முஹம்மதிய்யா மத்ரஸாவின் முதலாவது ஹாபிழா பாத்திமா நஸ்காவிற்கு மகத்தான கௌரவிப்பு!

பெரிய பள்ளிவாசல் சார்பில் பொற்கிழி  , பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வரவேற்பு பாறுக் ஷிஹான் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் கீழ் இயங்கி வரும் முஹம்மதிய்யா பெண்கள் பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸாவிலிருந்து முதலாவது அல்-ஹாபிழாவாகப் பட்டம் பெற்ற முஹம்மது பஹ்மி முஹைத்தீன் பாத்திமா நஸ்கா அவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு அண்மையில் ஆஸாத் ப்ளாஸா வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம்.ஐ.

கல்முனை முஹம்மதிய்யா மத்ரஸாவின் முதலாவது ஹாபிழா பாத்திமா நஸ்காவிற்கு மகத்தான கௌரவிப்பு! Read More »

போக்குவரத்து நெரிசல், வீதி விபத்துகளால் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர் பாதிப்பு

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொதுச்சந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள போதிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்முனை மாநகர சபை தொடர்ந்தும் மந்தகதியிலேயே செயற்பட்டு வருவதாகப் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். இரவு பகல் பாராது சுமார் 40க்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் கல்முனை நகரிலும் பொதுச்சந்தை வளாகத்திலும் கூட்டமாக உலவி வருகின்றன. இதனால் அன்றாடப் போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்படுவதுடன், தொடர்ச்சியாக வீதி விபத்துகளும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன.

போக்குவரத்து நெரிசல், வீதி விபத்துகளால் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர் பாதிப்பு Read More »

ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் பிரதேச சபையும் இணைந்து ‘அத்தம’ இரண்டாம் கட்ட தூய்மைப்பணி முன்னெடுப்பு

அரசாங்கத்தின் தூய்மையான மற்றும் அழகான சூழலை உருவாக்கும் எண்ணக்கருவிற்கமைய ‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘அத்தம’ தேசிய தூய்மை தின வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் ஆலையடிவேம்பு பிரதேச சபையும் இணைந்து இரண்டாம் கட்ட தூய்மைப்பணியை (19) சனிக்கிழமை முன்னெடுத்தன. இதன்போது, ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அக்கரைப்பற்று–சாகாம வீதி, வெள்ளப்பாதுகாப்பு வீதி சின்னமுகத்துவார கடற்கரை பிரதேசம் மற்றும் அரசையடி உள்ளிட்ட

ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் பிரதேச சபையும் இணைந்து ‘அத்தம’ இரண்டாம் கட்ட தூய்மைப்பணி முன்னெடுப்பு Read More »

செட்டிபாளையம் கடற்கரைக்கு மீன் வாங்க சென்றவர் மீது சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி கும்பல் தாக்குதல் — பொலிசார் நடவடிக்கை இல்லை பாதிக்கப்படவர் கடும் கவலை–

(கனகராஜா சரவணன்) மட்டு செட்டிபாளையம் கடற்கரையில் மீன் வாங்க சென்ற மேசன் தொழிலாளியான என் மீது சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன் பிடியில் ஈடுபட்டுவரும் ஜீவன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக  பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர் கடும் கவலை தெரிவித்தார் மட்டக்களப்பு வெய்ஸ் ஒப் மீடியாலில் சனிக்கிழமை (19) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் பாதிக்கப்பட்டவரான கோபிநாத் இவ்வாறு தெரிவித்தார். செட்டிபாளையத்தை சேர்ந்த நான் கடந்த 16ம்;

செட்டிபாளையம் கடற்கரைக்கு மீன் வாங்க சென்றவர் மீது சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி கும்பல் தாக்குதல் — பொலிசார் நடவடிக்கை இல்லை பாதிக்கப்படவர் கடும் கவலை– Read More »

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி திருகோணமலை இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கவனயீர்ப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுதலை செய்யக் கோரி திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி (20) திருகோணமலை கடற்கரை பகுதியில் உள்ள காந்தி உருவச்சிலைக்கு பின்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலையில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் இளைஞர்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறும் இரு நிமிட மௌன அஞ்சலியுன் சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இலங்கை அரசாங்கம் குறித்த விடயத்தில்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி திருகோணமலை இளைஞர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி கவனயீர்ப்பு Read More »

சீனாவுடனும் தெற்காசிய நாடுகளுடனும் கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இலங்கை தயார்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுடன் கடல்சார் அறிவியல், கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளர்ப்பு, நீலப் பொருளாதாரம், தொழில்நுட்பம், முதலீடு, மனிதவள மேம்பாடு மற்றும் அறிவுப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீண்டகால மற்றும் நடைமுறை சார்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சீன இயற்கை வள அமைச்சின் கடல்சார் அறிவியல் நிறுவனத்தின் பணிப்பாளர்

சீனாவுடனும் தெற்காசிய நாடுகளுடனும் கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இலங்கை தயார் Read More »

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார நிலையத்தை செயற்படுத்துவதற்கான தீர்க்கமான நடவடிக்கை

ஹஸ்பர் ஏ எச்- 2026 செப்டெம்பர் 18ஆம் திகதி, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார நிலையத்தை நிர்வகிப்பதற்கும் முகாமைத்துவம் செய்வதற்குமான அறக்கட்டளை (Trust) உத்தியோகபூர்வமாக நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளை இடைக்கால நிர்வாக அமைப்பாக செயற்பட்டு, கலாசார நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு தேவையான நிர்வாக மற்றும் நிதி சுயாதீனத்தை வழங்கும். அறக்கட்டளையின் நிர்வாக சபையில் பதவிவழி உறுப்பினர்களாக யாழ்ப்பாண மாநகர ஆணையாளர், யாழ்ப்பாண மாநகர சபை மேயர், வடக்கு மாகாண நிர்வாகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அல்லது அவரது பிரதிநிதி, புத்தசாசன,

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார நிலையத்தை செயற்படுத்துவதற்கான தீர்க்கமான நடவடிக்கை Read More »

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நற்பிட்டிமுனையில் கையெழுத்து சேகரிப்பு: திரண்ட தமிழ், முஸ்லிம் மக்கள்!

“ஒரு உயிரைக் காப்போம்” என்ற தொனிப்பொருளில் கவனயீர்ப்பு மன்றாட்டம் பாறுக் ஷிஹான்சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டு விடுவிக்க உரிய இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, நற்பிட்டிமுனை பகுதியில் (20) விசேட கையெழுத்து சேகரிப்பும் கவனயீர்ப்பு மன்றாட்டமும் முன்னெடுக்கப்பட்டன. சமூக ஊடகப் பதிவொன்றைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு ஆரம்பத்தில் 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேன்முறையீட்டின் அடிப்படையில்

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நற்பிட்டிமுனையில் கையெழுத்து சேகரிப்பு: திரண்ட தமிழ், முஸ்லிம் மக்கள்! Read More »