கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு கிராமத்தில் உள்ள “புதிய பாதை விசேட தேவையுடையோர் அமைப்பு” நிர்வாகிகள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், குறித்த அமைப்பு உறுப்பினர்களின் வாழ்வாதார சுய தொழில் முயற்சியை மேம்படுத்தும் நோக்கில் நெல் மற்றும் மா அரைக்கும் சிறியளவிலான ஆலைக்கான இயந்திர உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 16.09.2026 அன்று கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களால் குறித்த புதிய பாதை விசேட தேவையுடையோர் அமைப்பின் நிர்வாகிகளிடம் ஆலைக்கான இயந்திர உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.பிரபாகரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் புதிய பாதை விசேட தேவையுடையோர் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.





