September 22, 2026

18ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா வெற்றிகரமாக நிறைவு

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 18ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா, இரண்டு நாட்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் சிறப்பாக இடம்பெற்றதைத் தொடர்ந்து, (20.09.2026) ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்தது. விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகள் மற்றும் அணிகளுக்கான பரிசில்களையும் வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி கௌரவித்தார். வடக்கு மாகாணத்தின் ஐந்து

18ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா வெற்றிகரமாக நிறைவு Read More »

பாவனைக்கு உகந்ததற்ற பழங்கள் அகற்றம் : காரைதீவு பிரதேச சபை தவிசாளர் அதிரடி நடவடிக்கை

நூருல் ஹுதா உமர் காரைதீவு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் மனிதப் பாவனைக்கு உகந்ததற்ற பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் எஸ். பாஸ்கரன் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் பிரகாரம், குறித்த பொருட்களை உடனடியாக அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. காரைதீவு பிரதேச சபை எல்லைக்குள் பொதுமக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதையடுத்து, அது தொடர்பில்

பாவனைக்கு உகந்ததற்ற பழங்கள் அகற்றம் : காரைதீவு பிரதேச சபை தவிசாளர் அதிரடி நடவடிக்கை Read More »

மட்டு வாகனேரியில் யானை தாக்குதலில் 60 வயது விவசாயி உயிரிழப்பு – மக்கள் யானை வேலி அமைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கனகராஜா சரவணன் மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலில் 60 வயதுடைய விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (21) இடம்பெற்ற தையடுத்து ‘இனியும் உயிர் பலிகள் ஏற்படுவதற்கு முன் யானை – மனித மோதலை தடுக்க உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும்’ என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;. வாகனேரி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 60 வயதுடைய  ஞானமுத்து மனோகரன்   என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தார். குறித்த நபர் சம்பவ தினமான இன்று

மட்டு வாகனேரியில் யானை தாக்குதலில் 60 வயது விவசாயி உயிரிழப்பு – மக்கள் யானை வேலி அமைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் Read More »

அனோஜனின் மரண தண்டனைத் தீர்ப்பு குறித்து சவூதி ஊடகங்களோ தூதரகமோ இன்னமும் உறுதிப்படுத்தவில்லை”: உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கருத்து!

இனவாதத்தை ஒழித்து மனிதாபிமானத்தை வளர்க்குமாறு வேண்டுகோள் பாறுக் ஷிஹான் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள நற்பிட்டிமுனை இளைஞர் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தள முகநூல் ஊடகங்களே (FB News Agencies) செய்தி வெளியிட்டு வருகின்றனவே தவிர, சவூதி ஊடகங்களோ அல்லது அங்குள்ள இலங்கைத் தூதரகமோ இதுவரையில் அதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என இலங்கை உலமா கட்சியின் தலைவரும் முப்தியுமான முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். சவூதியில் வெளிநாட்டவர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால்,

அனோஜனின் மரண தண்டனைத் தீர்ப்பு குறித்து சவூதி ஊடகங்களோ தூதரகமோ இன்னமும் உறுதிப்படுத்தவில்லை”: உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கருத்து! Read More »

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை: MP வைத்தியர் இ.சிறிநாத்தின் நிதியில் இயந்திர உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு கிராமத்தில் உள்ள “புதிய பாதை விசேட தேவையுடையோர் அமைப்பு” நிர்வாகிகள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தி‌யர் இளையதம்பி சிறிநாத் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், குறித்த அமைப்பு உறுப்பினர்களின் வாழ்வாதார சுய தொழில் முயற்சியை மேம்படுத்தும் நோக்கில் நெல் மற்றும் மா அரைக்கும் சிறியளவிலான ஆலைக்கான இயந்திர உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 16.09.2026 அன்று கோறளைப்பற்று

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை: MP வைத்தியர் இ.சிறிநாத்தின் நிதியில் இயந்திர உபகரணங்கள் வழங்கி வைப்பு! Read More »

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இளைஞரின் பெற்றோரை (21) முற்பகல் ஜனாதிபதி சந்தித்திருந்தார்.

சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் இயன்றளவு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தலையீடு செய்யும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். குறிப்பாக, சவூதி அரசரிடம் இது தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குமாறு இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூல கோரிக்கையை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இங்கு ஜனாதிபதி குறிப்பிட்டார். மேன்முறையீடுகளைச் சமர்ப்பித்தல் உள்ளிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஊடாக இதுவரை உத்தியோகபூர்வமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு அவரின் பெற்றோருக்குத் தெரிவித்ததுடன், குறித்த நடவடிக்கைகள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இளைஞரின் பெற்றோரை (21) முற்பகல் ஜனாதிபதி சந்தித்திருந்தார். Read More »

கல்முனை முஹம்மதிய்யா மத்ரஸாவின் முதலாவது ஹாபிழா பாத்திமா நஸ்காவிற்கு மகத்தான கௌரவிப்பு!

பெரிய பள்ளிவாசல் சார்பில் பொற்கிழி  , பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வரவேற்பு பாறுக் ஷிஹான் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் கீழ் இயங்கி வரும் முஹம்மதிய்யா பெண்கள் பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸாவிலிருந்து முதலாவது அல்-ஹாபிழாவாகப் பட்டம் பெற்ற முஹம்மது பஹ்மி முஹைத்தீன் பாத்திமா நஸ்கா அவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு அண்மையில் ஆஸாத் ப்ளாஸா வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்-ஹாஜ் எம்.ஐ.

கல்முனை முஹம்மதிய்யா மத்ரஸாவின் முதலாவது ஹாபிழா பாத்திமா நஸ்காவிற்கு மகத்தான கௌரவிப்பு! Read More »