2026ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில், கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட பெண் மாணவிகள் கூடைப்பந்தாட்டம் மற்றும் கைப்பந்தாட்டம் ஆகிய இரண்டிலும் மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளனர்.
இப்போட்டிகளில் 17 வயதுக்குட்பட்ட பிரிவு கூடைப்பந்தாட்டத் தொடரில் அற்புதமாக விளையாடிய கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவிகள் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி முதலிடம் பிடித்தனர். அதேபோல், விறுவிறுப்பாக நடைபெற்ற கைப்பந்தாட்டப் போட்டியில் திறம்படச் செயல்பட்டு மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.



Post Views: 14




