ரோட்டரி கழகம் திருகோணமலையில் மாவட்ட ஆளுநரின் உத்தியோகபூர்வ விஜயம்

*திருகோணமலை, செப்டெம்பர் 20 – 2026–2027 ரோட்டரி ஆண்டிற்கான மாவட்ட ஆளுநரின் உத்தியோகபூர்வ விஜயம் (DGOV), ரோட்டரி கழகம் திருகோணமலையினால் செப்டெம்பர் 20ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு, 115, டைக் வீதியில் அமைந்துள்ள ரோட்டரி இல்லத்தில் நடைபெற்றது.

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான மாவட்ட ஆளுநர் Rtn. Kumar Sundararaj, மாவட்ட செயலாளர் Rtn. Ian Iddamalgoda மற்றும் உதவி ஆளுநர் Rtn. Eng. Robert Peries ஆகியோர் கலந்து கொண்டனர். ரோட்டரி உறுப்பினர்கள், ரோட்டராக்டர்கள், பாடசாலை இன்டராக்ட் மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.

திருகோணமலை ரோட்டரி கழகம் சமூகத்திற்காக முன்னெடுத்து வரும் சேவைத் திட்டங்களைப் பாராட்டிய மாவட்ட ஆளுநர், கழகத்தின் சமூகப் பங்களிப்புக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், மாவட்டத்திலுள்ள ஏனைய ரோட்டரி கழகங்களுடன் இணைந்து கூட்டு சேவைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.

நிகழ்வின் போது, *திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு சுகாதாரத் துடைப்பான் (Sanitary Napkin) எரியூட்டி இயந்திரம்* (Incinerator) ஒரு முன்னோடித் திட்டமாக கையளிக்கப்பட்டது. இதன் பயன்பாடு மற்றும் பயனை மதிப்பீடு செய்த பின்னர், இதே திட்டத்தை ஏனைய பாடசாலைகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தின் பிரதான திட்டமான *“Sharp Eyes – Learn Better”* குறித்து மாவட்ட ஆளுநர் விளக்கமளித்தார். பார்வைக் குறைபாடுகளைக் கொண்ட, குறிப்பாக வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவும் இத்திட்டத்திற்கு திருகோணமலை ரோட்டரி கழகம் முழுமையான ஆதரவை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த விஜயம், திருகோணமலை மாவட்டத்தில் ரோட்டரியின் சமூக சேவையை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

Share the Post: