admin

தம்பலகாமத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும்

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து போதை தடுப்பு தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் பணியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (25)இடம் பெற்றது.  திருகோணமலை கண்டி பிரதான வீதியின் தம்பலகாமம் சந்தி ஊடாக பயணம் செய்யும் வாகனங்களிலும்,பொது கட்டிடங்கள் பொது இடங்களிலும்  போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.  தம்பலகாமம் பிரதேச செயலாளர் க.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், மாவட்ட சமூக

தம்பலகாமத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் Read More »

​வெசாக் வாரத்தில் உழ்ஹிய்யா கடமை: சுமுகமான தீர்வு வழங்கிய அரசாங்கத்திற்கு நன்றி

அரச சுற்றுநிருபத்தை அவதானத்துடன் பின்பற்றுமாறு முஸ்லிம் சமூகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வேண்டுகோள் ​இவ்வருட வெசாக் வாரப் பிரகடனம் மற்றும் புனித ஹஜ் பெருநாளின் உழ்ஹிய்யா கடமைகள் ஒரே காலப்பகுதியில் அமைந்ததால் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலைக்கு, அரச சுற்றுநிருபம் மூலம் சுமுகமான தீர்வினை வழங்கியமைக்காக அரசாங்கத்திற்கு தனது நன்றிகளைத் தெரிவிப்பதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ​அதேவேளை, தேசிய நல்லிணக்கத்தையும் சமூக சகவாழ்வையும் பேணும் வகையில், பொது

​வெசாக் வாரத்தில் உழ்ஹிய்யா கடமை: சுமுகமான தீர்வு வழங்கிய அரசாங்கத்திற்கு நன்றி Read More »

வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திப் பெருவிழா

இந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழ்கின்ற ஈழமணித் திருநாட்டின் இயற்கை எழில்மிகு கிழக்கிலங்கையில் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்டுமாநகரின் வடபால் செந்நெல் வயலும் செந்தமிழ் மரபும் கனிகளோடு கறவையினப்பாலும் ஒருங்கே அமையப்பெற்ற நல்விருந்தோம்பும் சீரிய சைவர் குலம் வாழும் நலன்மிகு பழம்பதியாம் வந்தாறுமூலை தனில் பன்நெடுங் காலமாக கோயில் கொண்டு அடியார்கள் குறை தீர்த்து வேண்டும் வரங்களை வாரி வழங்கும் அற்புத அன்னையாம் வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திப் பெருவிழா

வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திப் பெருவிழா Read More »

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வைகாசி திருக்குளிர்த்திச் சடங்கு இன்று ஆரம்பம்!

வரலாற்றுப் பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி திருக்குளிர்த்திச் சடங்கு இன்று (25) திங்கட்கிழமை மாலை கடல் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, கல்யாணக்கால் நடலுடன் மிக விமரிசையாக ஆரம்பமாகவுள்ளது. இன்று மாலை ஆலய தர்மகர்த்தாக்கள் மற்றும் கப்புகனார் சகிதம் பக்தர்கள் கடலுக்குச் சென்று தீர்த்தம் எடுத்து வரும் வழியில், பாரம்பரிய முறைப்படி கல்யாணக்கால் முறித்துக்கொண்டு வரப்பட்டு ஆலயத்தில் நடப்படவுள்ளது. ஆலயத்தின் பிரதம கப்புகனார் தலைமையில் தொடர்ந்து ஏழு நாட்கள் பக்திப்பூர்வமாக நடைபெறவுள்ள இச்சடங்கு

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வைகாசி திருக்குளிர்த்திச் சடங்கு இன்று ஆரம்பம்! Read More »

அனர்த்த நிவாரணம்: மூதூரில் புயலினால் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், அண்மையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை மற்றும் புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கான நிவாரணக் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சேதமடைந்த வீடுகளைப் புனரமைப்பதற்கும் அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியுதவியின் கீழேயே இக்காசோலைகள் விநியோகிக்கப்பட்டன. மூதூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளினால் இக்காசோலைகள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. இழப்பீடுகளைக் துல்லியமாகக் கணிப்பீடு

அனர்த்த நிவாரணம்: மூதூரில் புயலினால் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு! Read More »

யாழ். சிறைச்சாலையில் பரபரப்பு: மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி தூக்கிட்டு தற்கொலை!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த கைதி ஒருவர், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்றையதினம் (25.05.2026) அதிகாலை சிறைச்சாலையின் கூரைப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015ஆம் ஆண்டு யாழ். புங்குடுதீவில் மாணவி வித்தியா கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த

யாழ். சிறைச்சாலையில் பரபரப்பு: மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி தூக்கிட்டு தற்கொலை! Read More »

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற  நீதிபதி ஏ.சி றிஸ்வான் இடை நிறுத்தம்

பாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி. றிஸ்வான் நீதிச்சேவை ஆணைக்குழு வெள்ளிக்கிழமை (22) முதல் இடை நிறுத்தி உள்ளது. இது தொடர்பான தொலை நகல் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிரான விசாரணைகள் நீதிச் சேவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்திருந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற  நீதிபதி ஏ.சி றிஸ்வான் இடை நிறுத்தம் Read More »

தென் மட்டுவில் வேரக்கேணி கந்தனின் பராபவ வருட மகோற்சவம்: பக்திப் பெருக்குடன் நடைபெற்ற 4ஆம் நாள் மாலை உற்சவம்!

யாழ்ப்பாணம், தென் மட்டுவில் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வேரக்கேணி கந்தசுவாமி ஆலயத்தின் பராபவ வருட (2026) திவ்ய மகோற்சவ பெருவிழா தற்பொழுது மிகவும் பக்திப் பூர்வமாக நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக, நேற்று (24.05.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலயத்தின் நான்காம் நாள் திருவிழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதன்போது விக்னேஸ்வர பூஜை, தம்பபூஜை மற்றும் மூலமூர்த்திக்கும் உற்சவமூர்த்திக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் என்பன நடைபெற்றன. தொடர்ந்து, வசந்த மண்டப பூஜைகளை அடுத்து எம்பெருமான் வள்ளி

தென் மட்டுவில் வேரக்கேணி கந்தனின் பராபவ வருட மகோற்சவம்: பக்திப் பெருக்குடன் நடைபெற்ற 4ஆம் நாள் மாலை உற்சவம்! Read More »

கம்பளையில் நள்ளிரவில் பயங்கரம்: சாஹிரா கல்லூரியின் ஆரம்பப்பிரிவு கட்டிடத்தின் மீது மரம் முறிந்து விழுந்து பாரிய சேதம்!

கம்பளை நகரில் நேற்று இரவு வீசிய கடும் காற்று காரணமாக, கம்பளை சாஹிரா கல்லூரியின் தரம் 1 மற்றும் தரம் 2 மாணவர்கள் கல்வி கற்கும் ஆரம்பப்பிரிவு கட்டிடத்தின் மீது பாரிய மரமொன்று முறிந்து விழுந்து வகுப்பறைகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று (24) நள்ளிரவு கம்பளை நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் திடீரென கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவியது. இதன் போதே, பாடசாலை வளாகத்தில் இருந்த பிரம்மாண்டமான மரமொன்று வேருடன் முறிந்து, தரம்

கம்பளையில் நள்ளிரவில் பயங்கரம்: சாஹிரா கல்லூரியின் ஆரம்பப்பிரிவு கட்டிடத்தின் மீது மரம் முறிந்து விழுந்து பாரிய சேதம்! Read More »

குடும்பத் தகராறு எல்லை மீறியது: மனைவிக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்த கணவன் கைது! (ஆபத்தான நிலையில் பெண் அனுமதி)_

குடும்பத் தகராறு காரணமாக மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில், கணவன் தனது மனைவியின் மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ள கொடூரச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்குள்ளான பெண், தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலின் பெரும்பகுதி தீயினால் கடுமையாகப் சேதமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக்கொடூரக் குற்றத்தைச் செய்த கணவன், சம்பவ இடத்திலேயே அக்கம் பக்கத்தினரின் துரித உதவியுடன் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு

குடும்பத் தகராறு எல்லை மீறியது: மனைவிக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்த கணவன் கைது! (ஆபத்தான நிலையில் பெண் அனுமதி)_ Read More »