• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • யாழ். சிறைச்சாலையில் பரபரப்பு: மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி தூக்கிட்டு தற்கொலை!

யாழ். சிறைச்சாலையில் பரபரப்பு: மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி தூக்கிட்டு தற்கொலை!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த கைதி ஒருவர், யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இன்றையதினம் (25.05.2026) அதிகாலை சிறைச்சாலையின் கூரைப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டு யாழ். புங்குடுதீவில் மாணவி வித்தியா கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் குழாம் (Trial-at-Bar), கடந்த 2017ஆம் ஆண்டு குற்றவாளிகளாகக் காணப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்த நிலையில், அவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்களுள் ஒருவரே இவ்வாறு இன்றையதினம் சிறைக்குள் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share the Post:

Related Posts