• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • அனர்த்த நிவாரணம்: மூதூரில் புயலினால் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு!

அனர்த்த நிவாரணம்: மூதூரில் புயலினால் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், அண்மையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை மற்றும் புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கான நிவாரணக் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சேதமடைந்த வீடுகளைப் புனரமைப்பதற்கும் அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியுதவியின் கீழேயே இக்காசோலைகள் விநியோகிக்கப்பட்டன. மூதூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளினால் இக்காசோலைகள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

இழப்பீடுகளைக் துல்லியமாகக் கணிப்பீடு செய்த பின்னர், முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட 60 குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எஞ்சிய பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் மிக விரைவில் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இதன்போது மேலும் குறிப்பிடப்பட்டது.

Share the Post:

Related Posts