• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வைகாசி திருக்குளிர்த்திச் சடங்கு இன்று ஆரம்பம்!

காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வைகாசி திருக்குளிர்த்திச் சடங்கு இன்று ஆரம்பம்!

வரலாற்றுப் பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி திருக்குளிர்த்திச் சடங்கு இன்று (25) திங்கட்கிழமை மாலை கடல் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, கல்யாணக்கால் நடலுடன் மிக விமரிசையாக ஆரம்பமாகவுள்ளது.

இன்று மாலை ஆலய தர்மகர்த்தாக்கள் மற்றும் கப்புகனார் சகிதம் பக்தர்கள் கடலுக்குச் சென்று தீர்த்தம் எடுத்து வரும் வழியில், பாரம்பரிய முறைப்படி கல்யாணக்கால் முறித்துக்கொண்டு வரப்பட்டு ஆலயத்தில் நடப்படவுள்ளது.

ஆலயத்தின் பிரதம கப்புகனார் தலைமையில் தொடர்ந்து ஏழு நாட்கள் பக்திப்பூர்வமாக நடைபெறவுள்ள இச்சடங்கு நாட்களில், ஊர்சுற்றுக் காவியம் பாடுதல் மற்றும் பச்சைகட்டல் ஆகிய விசேட நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

முக்கிய நிகழ்வுகளாக, எதிர்வரும் ஜூன் மாதம் 01ஆம் திகதி திங்கட்கிழமை காலையில் மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வும், அன்று பிற்பகல் 3.00 மணிக்கு மகா பொங்கலுக்காக நெற்குத்தும் வைபவமும் நடைபெறவுள்ளன.

தொடர்ந்து, ஜூன் மாதம் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பக்திப் பரவசமிக்க திருக்குளிர்த்தி பாடலுடன் சடங்கு நிறைவடையவுள்ளதுடன், ஜூன் 08ஆம் திகதி எட்டாம் சடங்குப் பூஜையும் சிறப்புற இடம்பெறவுள்ளது.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை போராட்டத்தை குழப்புவதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு—கட்சி செயலாளர் செல்வராசா கஜேந்திரன்