• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன் பாரிய மக்கள் எதிர்ப்புப் பேரணி!

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்: மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன் பாரிய மக்கள் எதிர்ப்புப் பேரணி!

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைக்கு எதிராக நடைபெறும் திட்டமிட்ட இன முறுகல் ,பசுவதை ,நில ஆக்கிரமிப்பு, சட்டவிரோத குடியேற்றம் ,பக்க சார்பான பொலிஸ் அராஜகம், அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை போன்றவற்றிற்கு எதிராக மட்டக்களப்பிலுள்ள பல்வேறு அமைப்பின் ஏற்பாட்டில் புதிய அரசாங்க அதிபர் காரியாலயத்திற்கு முன்னால் இன்று 02.11.2026 பாரிய அளவிலான மக்கள் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றியம், அறம் அமைப்பு,மட்டக்களப்பு மாவட்ட கால்நடை கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், மயிலத்தமடு மாதவனை கால்நடை வளர்ப்போர் பண்ணையாளர் சங்கம்,மட்டக்களப்பு மாவட்ட கமநல அமைப்பு, கமக்கார அமைப்புக்களின் மாவட்ட அதிகாரசபை, கிழக்கு மாகாண மீனவத் தொழிற்சங்கம், கிழக்கு மாகாண இந்துக் குருமார்கள் ஒன்றியம், மண்முனை மேற்கு விவசாய சம்மேளனம், மட்டு ஊடக அமையம்,மட்டக்களப்பு மாவட்டம். சர்வமத ஒன்றியம்,வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம்.படைப்பாற்றலுக்கான வானவில் தூண்கள் வலையமைப்பு.மட்டக்களப்பு மாவட்ட மீனவர் சங்கம்.ஆகிய பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன .

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வைத்தியர்இளையதம்பி சிறிநாத், கௌரவ ஞானமுத்து சிறிநேசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.அரியநேந்திரன் மற்றும் திரு யோகேஸ்வரன் யாழ்மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு கஜேந்திரன் மற்றும் மதகுருமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை போராட்டத்தை குழப்புவதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைப்பு—கட்சி செயலாளர் செல்வராசா கஜேந்திரன்