admin

கல்முனையில் அதிகாலையில் “ஸ்பைடர்மேன்” ஆல் பெண்ணுக்கு நடந்த கொடூரம்

கல்முனை வட்ட விதானை வீதியில் அதிகாலை வேளையில் அரங்கேறியுள்ள துணிகர தாலிப்பறிப்பு சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம் கடந்த 3ஆம் திகதி அதிகாலை 6.00 மணியளவில், பெண் ஒருவர் தனது வீட்டின் வாசலை பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது மதில் மேல் ஏறி பதுங்கியிருந்த மர்ம நபர் ஒருவர், திடீரென “ஸ்பைடர்மேன்” போல கீழே பாய்ந்துள்ளார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பெண்ணின்

கல்முனையில் அதிகாலையில் “ஸ்பைடர்மேன்” ஆல் பெண்ணுக்கு நடந்த கொடூரம் Read More »

சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு-கல்முனை வர்த்தக நிலைய பணியாளருக்கு  14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு

பாறுக் ஷிஹான் வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள  வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் மறுநாள் வியாழக்கிழமை(04)

சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு-கல்முனை வர்த்தக நிலைய பணியாளருக்கு  14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு Read More »

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஹப்புத்தளையில் சிரமதானம் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரஜா சக்தியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஹப்புத்தளை நகரில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. நிகழ்வின் ஆரம்பமாக, ஹப்புத்தளை அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூஜைகள் மற்றும் மதவழிபாடுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரி, ஹப்புத்தளை முஸ்லிம் மகா வித்தியாலயம், ஹப்புத்தளை பிரதேச செயலகம், நகர சபை, தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர்கள், அரணரி பாடசாலை மாணவர்கள், நகர சபை ஊழியர்கள், பிரஜா சக்தி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஹப்புத்தளையில் சிரமதானம் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு Read More »

சதிகார இலக்கு அதிகார இருக்கை? கேள்வி எழுப்புகின்றார் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் ஏழாண்டு காலத் தூக்கத்தின் பின்னர், விழித்து வருவதுபோல் தெரிகிறது. இந்த உண்மை மூன்று ஜனாதிபதிகளின் ஆட்சியில் மறைக்கப்பட்டிருந்தன. மைத்திரி, கோத்தா, ரணில் ஆகிய ஜனாதிபதிகளின் ஆட்சியில் இந்த உண்மை வெளியில் வரவில்லை. அதனைக் கண்டறிவதற்கான தேடலும் முறையாக நடைபெறவில்லை. என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை(05.06.2026) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…. மைத்திரியின் அறியாமை,

சதிகார இலக்கு அதிகார இருக்கை? கேள்வி எழுப்புகின்றார் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன். Read More »

ஊவா மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை தரம் – III க்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026

ஊவா மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை தரம் – III க்கு ஆட்சேர்ப்பதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026 Read More »

மூதூரில் சாதனை மாணவர்களுக்கு மகத்தான பாராட்டு: வைத்திய அத்தியட்சகர் ஹஸ்ஸாலி கௌரவிப்பு!

மூதூர் சுகாதார நிலையத்தின் வைத்திய அத்தியட்சகர் (DMO) வைத்தியர் எம். ஹஸ்ஸாலி அவர்களின் பங்கேற்புடன், மாணவர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று அண்மையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்த வைத்திய அத்தியட்சகர் எம். ஹஸ்ஸாலி அவர்கள், கல்வி மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்குப் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன், அவர்களுக்குரிய கௌரவங்களையும் விருதுகளையும் வழங்கி வைத்தார். “இன்றைய மாணவர்களின் அர்ப்பணிப்பும் உழைப்புமே நாளைய சமூகத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்” என இந்நிகழ்வில்

மூதூரில் சாதனை மாணவர்களுக்கு மகத்தான பாராட்டு: வைத்திய அத்தியட்சகர் ஹஸ்ஸாலி கௌரவிப்பு! Read More »

கல்முனை அல்-அஸ்ஹர் வித்யாலயத்திற்கு சீனத் தூதுவர் விஜயம்: மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், மக்களுக்கு உலர் உணவுகளும் வழங்கி வைப்பு!

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஜென்ஹொங் (HE. Qi Zhenhong) அவர்கள் இன்று (04) கல்முனை அல்-அஸ்ஹர் வித்யாலயத்திற்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டார். கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், ‘ரஹ்மத் பவுண்டேஷன்’ அமைப்பின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று இந்த விஜயம் அமைந்திருந்தது. பாடசாலை அதிபர் திருமதி ரிஷானா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, “சீனாவின் சகோதர பாசம்” எனும் தொனிப்பொருளில்

கல்முனை அல்-அஸ்ஹர் வித்யாலயத்திற்கு சீனத் தூதுவர் விஜயம்: மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், மக்களுக்கு உலர் உணவுகளும் வழங்கி வைப்பு! Read More »

உலக சுற்றாடல் தினம்: கல்முனை கடற்கரையில் Singer Finance மற்றும் இராவணா கழகம் இணைந்து மர நடுகை!

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பூரண அனுசரணையுடன், கல்முனை Singer Finance நிறுவனம் மற்றும் இராவணா கழகம் ஆகியன கைகோர்த்து நடாத்திய விசேட மர நடுகை செயற்திட்டம் கல்முனை கடற்கரைப் பகுதியில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இயற்கையை பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான சூழலை கையளிக்கும் உன்னத நோக்கோடு இந்த மர நடுகை விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. இது குறித்து இராவணா கழகத்தின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில்: “இன்று நாம் நடுகை

உலக சுற்றாடல் தினம்: கல்முனை கடற்கரையில் Singer Finance மற்றும் இராவணா கழகம் இணைந்து மர நடுகை! Read More »

பொத்துவிலில் பெரும் சோகம்: ஜும்ஆ தொழுகைக்குச் சென்ற 9 வயது மாணவன் விபத்தில் சிக்கி பலி!

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பசரிச்சேனை பகுதியில் இன்று (05) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோர விபத்தில் 9 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பசரிச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று மதியம் ஜும்ஆ தொழுகைக்காகச் சென்றுகொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அறூஸ் ஹமூத் எனும் 9 வயதுடைய மாணவன், வீதியைக் கடந்த போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்த மாணவன் உடனடியாக மீட்கப்பட்டு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும்,

பொத்துவிலில் பெரும் சோகம்: ஜும்ஆ தொழுகைக்குச் சென்ற 9 வயது மாணவன் விபத்தில் சிக்கி பலி! Read More »

யாழில் சுகாதாரத் தொண்டர்கள் வீதி மறியல் போராட்டம்: தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை என குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக சுகாதாரத் தொண்டர்கள் இன்று (05) வெள்ளிக்கிழமை காலை பாரிய கண்டனப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். தகுதியற்ற நபர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைத்துள்ளதாகக் குற்றம் சாட்டியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்டகாலமாகத் தொண்டர் அடிப்படையில் கடமையாற்றி வரும் தமக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதில் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வுகளுக்கு எவ்வித அனுபவமும் இல்லாத தகுதியற்ற நபர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர். “எமது உழைப்பைச் சுரண்டாதே!”,

யாழில் சுகாதாரத் தொண்டர்கள் வீதி மறியல் போராட்டம்: தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை என குற்றச்சாட்டு! Read More »