பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாணவர்கள் தங்களது கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடும் வகையிலான பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் நிலவும் டெங்குப் பரவல் அபாயத்தைக் குறைக்கும் நோக்கில், வழமையான பாடசாலைச் சீருடைக்கு மேலதிகமாக உடலை முழுமையாக மூடும் ஆடைகளை மாணவர்கள் அணிவதற்கு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இதற்கான உத்தியோகபூர்வ சுற்றுநிரூப அறிவுறுத்தல்கள் மிக விரைவில் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், டெங்கு நுளம்




