July 14, 2026

மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்

எல் நினோ (El Niño) காலநிலை தாக்கம் காரணமாக நிலவும் கடுமையான வறட்சியினால், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான பிரதான நீராதாரமான உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது. தற்போதைய அதிகரித்துள்ள வெப்பநிலை மற்றும் நீர்வளக் குறைபாட்டை கருத்தில் கொண்டு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் மிகவும் சிக்கனமாகவும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும், அனைவரும் குடிநீரை பொறுப்புணர்வுடன் பயன்படுத்தி, […]

மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல் Read More »

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான “மனதோடு பேசுவோம் மனம் திறந்து பேசுவோம்” எனும் தலைப்பில் உளநலம் தொடர்பான நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான “மனதோடு பேசுவோம் மனம் திறந்து பேசுவோம்” எனும் தலைப்பில் உளநலம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று (14) பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் தம்பலகாமம் பிரதேச உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட திருகோணமலை மாவட்ட உளவளத்துணை உத்தியோகத்தர், பிரதேச செயலக சக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். வளவாளராக அம்பாறை மாவட்ட செயலக மாவட்ட உளவளத்துணை உத்தியோகத்தர்

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான “மனதோடு பேசுவோம் மனம் திறந்து பேசுவோம்” எனும் தலைப்பில் உளநலம் தொடர்பான நிகழ்வு Read More »

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை

 சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட   நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட   நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு, உரிமையாளர்களின் பங்களிப்புடன் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டன.குறித்த பரிசோதனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் தலைமையில் இன்று  இவ்விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது  நீர் தேங்கக்கூடிய இடங்கள், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை Read More »

தெனியாய ஆரம்ப வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்க ரூ. 600 மில்லியன் உதவி வழங்கிய இந்தியா

ஹஸ்பர் ஏ.எச்- 2026 ஜூலை 13 அன்று, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க ஆகியோர், தெனியாய அடிப்படை வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டனர்.  இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கலந்து சிறப்பித்தார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், இயற்கை அனர்த்தங்களுக்கு அதிகளவில் ஆளாகும் தற்போதைய இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு மாற்றி அமைக்கப்படும் தெனியாய

தெனியாய ஆரம்ப வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்க ரூ. 600 மில்லியன் உதவி வழங்கிய இந்தியா Read More »

தளவாய் கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை: பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் உறுதி!

மட்டக்களப்பு, ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தளவாய் கிராம மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்துக் கலந்துரையாடும் விசேட மக்கள் சந்திப்பொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.07.2026) அன்று நடைபெற்றது. ஏறாவூர்பற்று நகரசபை உறுப்பினர் சு.ரகுபரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் கே.நாகேந்திரனின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச் சந்திப்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். இச்சந்திப்பின் போது,

தளவாய் கிராம மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை: பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் உறுதி! Read More »

திருக்கோனேஸ்வரா ஆலயத்துக்கு விஜயம் செய்த ஆசிய இராஜதந்திரிகள்

திருகோணமலைக்கு விஜயம் செய்த ஆசிய நாட்டு இராஜதந்திரிகள் இன்று (10) திருகோணமலை திருக்கோனேஸ்வரா ஆலயத்துக்கு சென்று விசேட வழிபாட்டில் ஈடுபட்டனர். மலேசியா,இந்தோனேசியா,மியன்மார், தாய்லாந்து,வியட்நாம் ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுக் குழுவினர் குறித்த பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர். இதன் போது முக்கிய இடமான திருகோணமலை சுற்றுலா துறை தொடர்பான விளக்கங்களை திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் தலைவர் குமார் ஜெயக்குமார் தெளிவூட்டினார். திருகோணமலை மாவட்டத்துக்கு விஜயம் செய்த தூதுக்குழு வினர் சுற்றுலா துறை முதலீட்டு வாய்ப்புக்கள் மூலமான பல்வேறு

திருக்கோனேஸ்வரா ஆலயத்துக்கு விஜயம் செய்த ஆசிய இராஜதந்திரிகள் Read More »

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய நுழைவாயில் திறப்பு: பொதுமக்களின் நீண்டகால நெரிசல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்டகால போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், வைத்தியசாலையின் புதிய பிரதான நுழைவாயில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைகளுக்காகவும், நோயாளர்களைப் பார்வையிடுவதற்காகவும் வந்து செல்லும் நிலையில், பிரதான வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் அசௌகரியங்கள் ஏற்பட்டு வந்தன. இதனால் நோயாளர்களை அவசரமாக ஏற்றிவரும் ஆம்புலன்ஸ் வண்டிகள் கூட கடும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தன. இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக,

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய நுழைவாயில் திறப்பு: பொதுமக்களின் நீண்டகால நெரிசல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி! Read More »

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் படுகாயமடைந்த மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற பாரிய வன்முறை மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று (13) மற்றும் இன்று (14) அதிகாலை வேளைகளில் இந்த இரு அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். புதிதாக பதிவாகிய இந்த இரு மரணங்களுடன், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் படுகாயமடைந்த மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு! Read More »

ஆணையாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த மாநகர சபை ஊழியர் சிறையிலடைப்பு

பாறுக் ஷிஹான் கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம். நெளபீஸுக்குக் கடமை நேரத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபை ஊழியரை  02 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் உத்தரவிட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை 02 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், நீதிமன்ற வேலை நேரத்திற்குள் உரிய முறையில் பிணை எடுக்கத் தவறியமையினாலேயே அவர் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு

ஆணையாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த மாநகர சபை ஊழியர் சிறையிலடைப்பு Read More »

மாணவர்களுக்கு அவசர அறிவித்தல்! டெங்கு அபாயத்திலிருந்து தப்ப கை, கால்களை மூடும் ஆடைகளுக்கு கல்வி அமைச்சு அனுமதி!

பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாணவர்கள் தங்களது கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடும் வகையிலான பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் நிலவும் டெங்குப் பரவல் அபாயத்தைக் குறைக்கும் நோக்கில், வழமையான பாடசாலைச் சீருடைக்கு மேலதிகமாக உடலை முழுமையாக மூடும் ஆடைகளை மாணவர்கள் அணிவதற்கு இந்தத் தீர்மானம்

மாணவர்களுக்கு அவசர அறிவித்தல்! டெங்கு அபாயத்திலிருந்து தப்ப கை, கால்களை மூடும் ஆடைகளுக்கு கல்வி அமைச்சு அனுமதி! Read More »