July 14, 2026

அம்பாறையில் பாரிய தீ விபத்து: தேங்காய் நார் தொழிற்சாலை தீக்கிரை

கதவை வெல்டிங் செய்தபோது சிதறிய தீப்பொறியே காரணம்; விமானப்படையினரும் மாநகர சபையினரும் இணைந்து தீயை அணைத்தனர் அம்பாறை மாநகர சபைப் எல்லைக்குட்பட்ட நவகம்புர தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தேங்காய் நார் தொழிற்சாலை ஒன்றில் திங்கட்கிழமை (13)  மாலை திடீரென ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்  தொழிற்சாலைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நவகம்புர தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ‘பிரபோத’ நிறுவனத்திற்குச் சொந்தமான தேங்காய் நார் தொழிற்சாலையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. தொழிற்சாலையின் கதவொன்றை வெல்டிங் (பற்றவைப்பு) செய்யும் பணியில் ஊழியர்கள் […]

அம்பாறையில் பாரிய தீ விபத்து: தேங்காய் நார் தொழிற்சாலை தீக்கிரை Read More »

புத்தங்கல சரணாலயப் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

 பாறுக் ஷிஹான் அம்பாறை  புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்றில்  சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த நபர்  அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால்   கைது செய்யப்பட்டுள்ளார். காட்டு விலங்குகளை வேட்டையாடும் நோக்கில்  குறித்த நபர் சட்டவிரோதத் துப்பாக்கியுடன் நடமாடுவதாக வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை திங்கட்கிழமை(12) மாலை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.  கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதத் துப்பாக்கியை மீட்டெடுத்துள்ள அதிகாரிகள்  சந்தேக

புத்தங்கல சரணாலயப் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது Read More »

சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்புச் சிரமதானம் சபூர் வித்தியாலயத்தில் விசேட முன்னெடுப்பு

சம்மாந்துறை கமு/சது சபூர் வித்தியாலயத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், பாடசாலை வளாகத்தில் டெங்கு ஒழிப்புச் சிரமதான நிகழ்வு மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. ​சமூகப் பொறுப்புணர்வோடு முன்னெடுக்கப்பட்ட இந்தச் சிரமதான நிகழ்வில், பாடசாலையின் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழல்கள் நுளம்பு பெருக்காத வண்ணம் முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டன. ​இந்த சமூகப் பணியானது, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் T. பரமேஸ்வரன் (PHI) அவர்களின் வழிகாட்டலில், பாடசாலை அதிபர் T.K.M. சிராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் வீரமுனை இராணுவ முகாம்

சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்புச் சிரமதானம் சபூர் வித்தியாலயத்தில் விசேட முன்னெடுப்பு Read More »

உலகின் அகன்ற வாய்! தனது சொந்த சாதனையை மீண்டும் முறியடித்து அமெரிக்க இளைஞர் அசத்தல்!

உலகின் மிகப்பெரிய வாய் பிளக்கும் திறனுக்கான (Largest Mouth Gape) கின்னஸ் உலக சாதனையை, அமெரிக்காவைச் சேர்ந்த ஐசக் ஜான்சன் (Isaac Johnson) என்ற இளைஞர் தொடர்ந்து தன் வசம் வைத்துள்ளார். தனது 14 வயதிலிருந்தே இந்த விசித்திரமான சாதனையை படைக்கத் தொடங்கிய அவர், தனது உடல் வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வப்போது தனது சொந்த சாதனைகளையே முறியடித்து புதிய மைல்கற்களை எட்டி வருகின்றார். ஆரம்பத்தில் 10.175 சென்டிமீற்றர் அளவில் உலக சாதனையை தன்வசப்படுத்தியிருந்த ஐசக், இத்தாலியில் நடைபெற்ற

உலகின் அகன்ற வாய்! தனது சொந்த சாதனையை மீண்டும் முறியடித்து அமெரிக்க இளைஞர் அசத்தல்! Read More »

யாலப் பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்: அம்பாறையில் மேலும் 9 களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான யால  பருவ நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று (13) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. அம்பாறை, உஹன பாலம்  நெல் களஞ்சியசாலையில் இக்கொள்முதல் திட்டத் தொடக்க விழா இடம்பெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான அனுபமா மங்கள விக்ரமாராச்சி மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதித் தலைவர் சம்பத் தௌலகல ஆகியோர் கலந்துகொண்டு நெல் கொள்முதலை ஆரம்பித்து வைத்தனர். குறித்த பகுதியில் இரண்டு பிரதான நெல் களஞ்சியசாலைகள் அமைந்துள்ள போதிலும்,

யாலப் பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்: அம்பாறையில் மேலும் 9 களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை Read More »

அஷ்ரப் சதுக்கம் மற்றும் பிரதேச சபை வளாகத்தில் குப்பை கொட்டத் தடை

பாறுக் ஷிஹான்அம்பாறை மாவட்டம் நிந்தவூர் எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையைச் சுற்றியுள்ள வளாகங்களில்  சிலரால் தொடர்ச்சியாக அநாமதேயமாக குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டு வருவதாக நிந்தவூர் பிரதேச சபை  தெரிவித்துள்ளது. இவ்விடங்களில் குப்பைகள் கொட்ட வேண்டாம் என பலமுறை அறிவுறுத்தப்பட்ட போதிலும், சில தனிநபர்களால் தொடர்ந்து இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபடுவதுடன், பொதுச் சுகாதாரத்திற்கும், பிரதேசத்தின் அழகுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதனைக் கருத்திற்

அஷ்ரப் சதுக்கம் மற்றும் பிரதேச சபை வளாகத்தில் குப்பை கொட்டத் தடை Read More »

கிண்ணியா பகல் நேர பராமரிப்பு நிலையம் திறப்பு விழா தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ.எச்- – திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயல பிரிவின் நடுவூற்று கிராமத்தில் அமையப் பெற்றுள்ள விசேட தேவையுடையவர்களுக்கான பகல் நேர பராமரிப்பு நிலைய கட்டிட திறப்பு விழா தொடர்பான கலந்துரையாடல் (13) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி.எம்.ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ.சிறீபதி மற்றும் கணக்காளர், பிரதம

கிண்ணியா பகல் நேர பராமரிப்பு நிலையம் திறப்பு விழா தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் Read More »