• Home
  • ›
  • உலகச் செய்திகள்
  • ›
  • உலகின் அகன்ற வாய்! தனது சொந்த சாதனையை மீண்டும் முறியடித்து அமெரிக்க இளைஞர் அசத்தல்!

உலகின் அகன்ற வாய்! தனது சொந்த சாதனையை மீண்டும் முறியடித்து அமெரிக்க இளைஞர் அசத்தல்!

உலகின் மிகப்பெரிய வாய் பிளக்கும் திறனுக்கான (Largest Mouth Gape) கின்னஸ் உலக சாதனையை, அமெரிக்காவைச் சேர்ந்த ஐசக் ஜான்சன் (Isaac Johnson) என்ற இளைஞர் தொடர்ந்து தன் வசம் வைத்துள்ளார்.

தனது 14 வயதிலிருந்தே இந்த விசித்திரமான சாதனையை படைக்கத் தொடங்கிய அவர், தனது உடல் வளர்ச்சிக்கு ஏற்ப அவ்வப்போது தனது சொந்த சாதனைகளையே முறியடித்து புதிய மைல்கற்களை எட்டி வருகின்றார்.

ஆரம்பத்தில் 10.175 சென்டிமீற்றர் அளவில் உலக சாதனையை தன்வசப்படுத்தியிருந்த ஐசக், இத்தாலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தனது வாய் பிளக்கும் திறனை மேலும் அதிகரித்து, 10.196 சென்டிமீற்றர் என்ற புதிய சாதனையை நிலைநாட்டியிருந்தார்.

பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் இவரது இந்த அசாத்தியமான திறமையினால், ஒரே நேரத்தில் பேஸ்பால் பந்து, முழுமையான ஆப்பிள் பழம், குளிர்பானப் போத்தல்கள் மற்றும் நான்கு பர்கர்களை (Cheeseburgers) ஒரே நேரத்தில் வாயினுள் வைக்கும் அளவிற்கு வாயை அகலமாகத் திறக்கக்கூடியவராகக் காணப்படுகின்றார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐசக் ஜான்சன், இது தனக்கு இயற்கையாகவே அமைந்த ஒரு கொடை என்றும், வாயை இவ்வளவு அகலமாகத் திறக்கும்போது தனக்கு எந்தவிதமான வலியோ அல்லது அசௌகரியங்களோ ஏற்படுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share the Post: