ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான “மனதோடு பேசுவோம் மனம் திறந்து பேசுவோம்” எனும் தலைப்பில் உளநலம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று (14) பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் தம்பலகாமம் பிரதேச உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட திருகோணமலை மாவட்ட உளவளத்துணை உத்தியோகத்தர், பிரதேச செயலக சக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வளவாளராக அம்பாறை மாவட்ட செயலக மாவட்ட உளவளத்துணை உத்தியோகத்தர் மனூஸ் கலந்து கொண்டு விளக்க உரைகளை முன்வைத்தார். நாளாந்தம் அலுவலக வேலை தொடக்கம் வீட்டு சூழல் வரையில் ஏற்படும் உளநெருக்கீடுகளை சமாளித்து அமைதியான உள்ளத்தை வளப்படுத்துதல் வெளிப்படை தன்மையான நடைமுறை ரீதியான விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையால் மூலமான தெளிவான விளக்கங்களை வளவாளர் முன்வைத்து உரையாற்றினார். இதனை தொடர்ந்து உளமதிப்பீடு மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு எவ்வகையில் உதவுகிறது தொடர்பிலும் மதிப்பீட்டு முறைகள் தொடர்பிலும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.




